|
அப் பெண்ணின்
மனத்தைத் தனக்குப் பரம்பரை உரிமையாக வந்த
உறைவிடம் போல் அப்பேய் கொண்டிருந்ததென்பது கருத்து.
| 40 |
கள்ளங்
காட்டுகு ணுங்குக டிந்தபின்
னுள்ளங் காட்டுப ளிங்குணர்ந் தாலென
வெள்ளங் காட்டுவா லாமைவி ழுங்கெனா
மள்ளங் காட்டி மாழ்ந் தேனென நாணினாள். |
| |
கள்ளம் காட்டு
குணுங்கு கடிந்த பின்,
உள்ளம் காட்டு பளிங்கு உணர்ந்தால் என,
"வெள்ளம் காட்டு வாலா மை விழுங்கு எனா,
மள்ளம் காட்டி மாழ்ந்தேன்!" என நாணினாள். |
பொய்யைக்
காட்டி மயக்கும் பேய் தன்னைவிட்டு விலகிய பின்,
தன் உள்ளத்தை உள்ளவாறு காட்டும் ஒரு கண்ணாடியால்
உணர்ந்துகொண்டாற்போல் கண்டறிந்து, "மழை வெள்ளம் காட்டிலுள்ள
அழுக்குகளையெல்லாம் வாரி விழுங்குவதுபோல் இதுவரையில் பாவத்தில்
என் திறமையைக் காட்டிக்கெட்டேன்" என்று அவள் நாணம் கொண்டாள்.
| 41 |
உவாவ மர்த்திய
வங்குச மொப்பெனத்
தவாவ யத்திவ டாங்கிய நாணமே
சுவாத மைத்தது கட்டுடைத் தோர்கரை
யவாவு டைக்கடற் காங்கடைத் தாளரோ. |
| |
உவா அமர்த்திய
அங்குசம் ஒப்பு என,
தவா வயத்து இவள் தாங்கிய நாணமே
சுவாது அமைத்த துகள் துடைத்து, ஓர் கரை
அவா உடைக் கடற்கு ஆங்கு அடைத்தாள் அரோ. |
யானையை
அடக்கிய அங்குசத்திற்கு ஒப்பாக, கெடாத வலிமையோடு
இவள் பூண்டிருந்த நாணமே சிற்றின்பம் தனக்கு விளைவித்த பாவமெல்லாம்
துடைத்துப் போக்கவே, ஆசை என்னும் கடலுக்கு ஒரு கரையாக
அந்நாணத்தையே அவ்விடத்தில் இட்டு வைத்து அடைத்தாள்.
|