|
சுவாது - இன்பம்:
இங்குச் சிற்றின்பத்தைக் குறித்தது. 'அரோ'
அசைநிலை.
| 42 |
நாணி
நாணுப நாடிய காரணங்
காணி லாள்வெரு வுங்களி யுங்கொடு
வாணி லாவிழி நித்திலம் வார்முகங்
கோணி யொன்றுரை யாகுழு நீங்கினாள். |
| |
நாணி, நாணுப
நாடிய காரணம்
காண் இலாள், வெருவும் களியும் கொடு,
வாள் நிலா விழி நித்திலம் வார்முகம்
கோணி, ஒன்று உரையா, குழு நீங்கினாள். |
நாணம் கொண்டு,
தான் நாணுவதற்கு நாடிய காரணம் காணாதவளாய்,
அச்சமும் மகிழ்ச்சியும் ஒருங்கே கொண்டு, வாள் போன்றதும் ஒளி
பொருந்தியதுமான தன் கண்ணினின்று கண்ணீராகிய முத்து வடிந்து விழும்
முகத்தைத் திருப்பிக் கொண்டு, ஒரு பேச்சுமின்றி, அச்கூட்டத்தை விட்டு
விலகினாள்.
நாணுப
- நாண.
மனம்
மாறிய மங்கை
- மா, - மா,
- மா, - மா, - மா, - மா
| 43 |
நீரார் பவளத்
துறையி னிரைநித் திலமுய்த் தென்னா
வேரார் துவர்வாய் முறுவ விலங்க நின்றா ளேதோ
சூரார் முகத்தோ டுரையா துறந்தா ளென்றாங் குறைந்தார்
வாரார் கழலார்த் திடிப்ப வருந்தி வெருவிப் போனார். |
|