பக்கம் எண் :

முதற் காண்டம்57

     மாலை இருள் மாறி விளங்கிய நிறைமதியின் அழகு இயல்பை மாறச்
செய்து விளங்கிய முகமுள்ள மாதர்கள் மயக்கம் நீங்கிய கற்புள்ள தம்
மார்பில் தவழும் மாலையாக மாறிய முல்லை மலர்களைக் கொண்டுள்ள
மாண்பினர் ஆவார்.

     'ஓ' அசைநிலை. முல்லை மாலையை எம்மாதரும் அணியக்
கூடுமாயினும், முல்லை கற்பெனும் தன் பெயருக்கேற்பக் கற்புடை மாதரே
அணிதலினால், தனக்கும் அணிந்த மாதருக்கும் சிறப்பாயிற்று என்பது
கருத்து.

              77
மாசி கற்குவ ழங்கிய வம்பிலார்
மாசி கற்குவ ழங்கிய வன்பினார்
தேசி கத்திணை சீர்வரைத் தோளினார்
தேசி கத்திணை சீர்வரைத் தோதுமார்.
 
மாசு இகற்கு வழங்கிய அம்பு இலார்,
மாசு இகற்கு வழங்கிய அன்பினார்
தேசிகத்து இணைசீர் வரைத் தோளினார்,
தேசிகத்து இணைசீர் வரைத்து ஓதும் ஆர்?

     பிறர் மாசு காரணமாக எழுந்த பகையைப் போக்கவென்று செலுத்திய
அம்பு இல்லாதவராய், மேகத்தோடு மாறுபடுவதற்கென்று வறியவர்க்கு
வழங்கிய அன்புடையவராய், பொன்னுக்கு இணையான சிறப்புள்ள மலை
போன்ற தோளை உடையவராகிய அந்நாட்டு வீரர்தம் புகழோடு பொருந்திய
சிறப்பையெல்லாம் வரைந்து காட்டும் முறையில் யார் எடுத்துக் கூறுவார்?

     'ஓதும்' என்ற செய்யுமென் முற்று 'ஓதுவார்' என்ற பொருளிற் பலர்
பாலுக்கு வந்தது வழுவமைதி எனக் கொள்க. மாசு இல்லாமையால் இகலும்,
இகல் இல்லாமையால் போரும், போர் இல்லாமையால் அம்பு வழங்கலும்
அந்நாட்டு வீரர்க்கு இலவாயின.

              78
அல்ல தில்லைய ருந்தவ மாய்த்திரு
வல்ல தில்லைய ருந்தவ ளித்தலாற்
புல்ல தில்லைபு னைந்தற மாட்சியாற்
புல்ல தில்லைபு னைந்தன வாழ்க்கையால்.