| 45 |
இன்னே
யிரவி காணந் தகனே ரியல் கொண் டின்னாள்
பொன்னே மணியே பொலியோர் பெயர்கொள் வலைகா
ளும்மாற்
கொன்னே குழையப் பிறருங் குழைந்தே னெனநொந் தழுதே
மின்னே மின்னிப் பெயுங்கால் விழும்போல் விழவீர்த்
தெறிந்தாள். |
| |
இன்னே இரவி
காண் அந்தகன் நேர் இயல் கொண்டு இன்னாள்,
"பொன்னே மணியே பொலி ஓர் பெயர் கொள் வலைகாள், உம்மால்,
கொன்னே குழையப் பிறரும் குழைந்தேன்!" என நொந்து அழுதே,
மின்னே, மின்னிப் பெயுங் கால், விழும் போல் விழ, ஈர்த்து
எறிந்தாள். |
இப்பொழுதே பகலவனை
முதன்முதலாகக் காணும் குருடனுக்கு
ஒப்பான இயல்பை இவள் கொண்டு, "பொன்னென்றும் மணியென்றும்
பொலிவான ஒரு பெயரைக் கொண்டுள்ள வலைகளை, உங்களைக்
கருவியாகக் கொண்டு, வீணே பிறரும் குழையுமாறு நான் காமக் குழைவு
காட்டி நின்றேன்!" என்று நொந்து அழுதாள்; மின்னி மழை பெய்யும்
பொழுது, மின்னலே சேர்ந்து விழுவது போல் விழுமாறு
அணிகலன்களையெல்லாம் இழுத்து அறுத் தெறிந்தாள்.
'பிறரும் குழைய'
எனவும், 'மின்னே விழும் போல்' எனவும் மாற்றிக்
கூட்டுக.
| 46 |
விண்டிக்
கொழுகிக் குழல்சூழ் விரைவீ சியதண் டொடைகாள்
வண்டிற் கிரைசெய் தெனையும் வண்டிற் கிரைசெய் தீரே
யிண்டிக் கொழுகா நஞ்சிட் டீரென் றிவளுட் சினந்தே
தெண்டித் தெனப்பூந் தாளாற் றேய்த்தா டுவைத்தா டுடைத்தாள். |
|