பக்கம் எண் :

முதற் காண்டம்572

"விண்டு இக்கு ஒழுகிக் குழல் சூழ் விரை வீசிய தண்
                                    தொடைகாள்,
வண்டிற்கு இரை செய்து, எனையும் வண்டிற்கு இரை
                                    செய்தீரே,
இண்டு இக்கு ஒழுகா நஞ்சு இட்டீர்!" என்று இவள் உள்
                                    சினந்தே,
தெண்டித்து என, பூந் தாளால் தேய்த்தாள், துவைத்தாள்,
                                    துடைத்தாள்.

     இந்தக் காந்தரி, மாலைகளை நோக்கி, "மலர்ந்து தேன் பொழிந்து
என் கூந்தலில் சுற்றப்பட்டு மணம் வீசிய குளிர்ந்த மாலைகளே, தேனை
வண்டுகளுக்கு இரையாகத் தந்து, என்னையும் பாவத்துக்கு இரையாாகச்
செய்தீர்களே; இங்கு எனக்கு மட்டும் தேனைப் பொழியாமல் நஞ்சையே
பொழிந்தீர்!" என்று கூறி, மனத்துள் சினந்து, அவற்றைத் தண்டித்தாற்
போல, தனது மெல்லிய காலால் தேய்த்து மிதித்து அழித்தாள்.

     'ஈண்டு' என்பது, 'இண்டு' எனக் குறுக்கல் விகாரம் கொண்டது.
 
                     47
அருப்பு மடறேன் குளிரென் றணியாய் முலைசூ ழலங்காள்
கருப்பு வில்லே வியவெங் கணையாய், மனமே கருக
விருப்புச் செய்துண் ணுழைந்தே வெந்தீப் புகுத்திக் கொன்றீர்
நெருப்புக் கொணர்ந்தீர் நெருப்பில் வேவீ ரெனச்சுட் டிட்டாள்.
 
"அரும்பு மடல் தேன் குளிர் என்று அணியாய் முலை சூழ்
                                         அலங்காள்,
கரும்பு வில் ஏவிய வெங் கணையாய், மனமே கருக,
விருப்புச் செய்து உள் நுழைந்தே, வெந் தீப் புகுத்திக் கொன்றீர்;
நெருப்புச் கொணர்ந்தீர் நெருப்பில் வேவீர்!" எனச் சுட்டிட்டாள்.

     "பூவரும்பின் இதழில் வழியும் தேன் குளிர்ச்சி தருவதென்று அணிகள்
போல் என் மூலையைச் சூழ்ந்து கிடந்த மாலைகளே, மன்மதனின் கரும்பு
வில் ஏவிய கொடிய மலர் அம்பு போல் விருப்பத்தைத் தூண்டிவிட்டு
உள்ளே நுழைந்துகொண்டு, என் மனம் கருகுமாறு பாவமென்னும் கொதி