பக்கம் எண் :

முதற் காண்டம்573

நெருப்பைப் புகுத்தி என்னைக் கொன்று விட்டீர்களே, நெருப்பை எனக்குக்
கொணர்ந்த நீரும் நெருப்பில் வேவீராக!" என்று, அம் மாலைகளை
நெருப்பிலிட்டுப் பொசுக்கினாள்.

     காம உணர்வைத் தூண்டும் மன்மதன் கரும்பு வில்லில் கரும்பு
(வண்டு) நாண் பூட்டி அரும்பு அம்பு ஏவுவானென்று கொள்வது நம்
நாட்டு மரபு. அரும்பு + மடல் - அருப்பு மடல்; கரும்பு + வில் -
கருப்பு வில்.
 
                     48
சுண்ணங் கலவை சுதைசாந் தெனும்வண் டிவறுஞ் சேறே
தண்ணங் கொண்டா யென்றார் சடமே யென்றார் தழலும்
வண்ணங் கொண்டா யெனவென் மனமே யறியுங் கசடா
யெண்ணங் கடிய வெரிந்தே னெரிந்தே னென்னா வெறிந்தாள்.
 
சுண்ணம் கலவை சுதை சாந்து எனும் வண்டு இவறும் சேறே,
தண்ணம் கொண்டாய் என்றார் சடமே என்றார்; தழலும்
வண்ணம் கொண்டாய் என என் மனமே அறியும்; கசடு ஆய்,
எண்ணம் கடிய எரிந்தேன், எரிந்தேன்!" என்னா எறிந்தாள்.

     "சுண்ணம் என்றும் கலவை என்றும் சுதை என்றும் வாசனைச் சாந்து
என்றும் பல பெயரால் அழைக்கப்பட்டு, உண்மையில், வண்டுகள் விரும்பும்
சேறே, நீ குளிர்ச்சி கொண்டுள்ளாய் என்றவரெல்லாம் பொய்யே
சொல்லினார்; நீ எரியும் தன்மை கொண்டுள்ளாய் என என் மனமே பட்டு
அறியும்; உன்னால் பாவம் விளையப் பெற்று, என் எண்ணமே என்னைக்
கடிந்துகொள்ளுமாறு எரிந்தேன், எரிந்தேன்!" என்று கூறி, அந்நறுமணச்
சாந்தைத் தூக்கி எறிந்தாள்.
 
                     49
பண்ணே நீயோர் முலையாய்க் கீதம் பாலாய்ச் சுரந்தேன்
கண்ணே காத்த கனிவா லூட்டிக் காமக் குழவி
பெண்ணே யறியா வளர்ந்தேன் பெரிதாய்க் கணையாற்
                                    சுடுமென்
றெண்ணே னிதற்கே யினஞ்செய் திருந்தாய் நீயென்
                                    றொடித்தாள்.