"பண்ணே, நீ
ஓர் முலையாய், கீதம் பாலாய்ச் சுரந்தேன்;
கண்ணே காத்த கனிவால் ஊட்டி, காமக் குழவி,
பெண்ணே அறியா, வளர்த்தேன்; பெரிதாய்க் கணையால்
சுடும் என்று
எண்ணேன்; இதற்கே இனம் செய்து இருந்தாய் நீ!" என்று
ஒடித்தாள். |
"யாழே, நீ
ஒரு முலைபோல் அமைய, உன்னிடம் இசையைப்
பாலாகச் சுரந்தேன்; கண்ணைக் காத்த கனிவால் அப்பாலை ஊட்டி, என்
பெண்மையால் அறியாமல், காமம் என்னும் குழந்தையை வளர்த்தேன்; அது
பின் தன் அம்பினால் பெரிதாய் என்னையே சுடுமென்று எண்ணத்
தவறினேன்; இதற்கே நீ துணை செய்து இருந்தாய்!" என்று கூறி, யாழை
ஒடித்தாள்.
| 50 |
வாயே
கரமே செவியே மருளுங் கண்ணே மூக்கே
போயே வினைகொண் டுள்ளே புகுமைம் பகையாம் பொறிகாள்
தீயே கொணர்ந்தீ ரெனவுட் சிறைசெய் தொறுப்பே னொறுத்தற்
கோயே னோயே னெனவுள் ளூக்கங் காவற் கொண்டாள். |
| |
"வாயே, கரமே,
செவியே, மருளும் கண்ணே, மூக்கே,
போயே வினை கொண்டு உள்ளே புகும் ஐம் பகையாம் பொறிகாள்,
தீயே கொணர்ந்தீர் என உள்சிறை செய்து ஒறுப்பேன்; ஒறுத்தற்கு
ஓயேன், ஓயேன்!" என, உள் ஊக்கம் காவல் கொண்டாள். |
"என் வாயே,
கையே, செவியே, நிலையாது மருளும் கண்ணே,
மூக்கே, மனம் சென்ற வழியே சென்று, தீவினையை, வாரிக்கொண்டு என்
உள்ளே புகும் ஐம்பகைகளாகிய பொறிகளே, நீர் எனக்குத் தீமைகளையே
கொண்டு வந்தீரென்று கண்டு, என் உள்ளத்துள் சிறைப்படுத்தி உங்களை
வதைப்பேன்; வதைப்பதற்கு ஓயமாட்டேன், ஓயமாட்டேன்!" என்று கூறி
மனவூக்கத்தை அதற்குக் காவலாகக் கைக்கொண்டாள்.
| 51 |
"மீனே
கொடியாய் விதுவே குடையாய் வேலை முரசாய்க்
கானே யுமிழ்பூக் கணையாய்க் கழையே தனுவா யுருவம்
நானே எழுதி நாமம் வேளென் றேனென் னுயிரைத்
தானே யுண்டா னினிக்கொல் சமனாக் குவனா னென்றாள். |
|