|
"நீ, உன்னையே
மறந்தாய், என் நெஞ்சே; நீண்ட செங்கோலால்
நீதி செலுத்த வல்லோனாகிய ஆண்டவனையும் மறந்தாய், நெஞ்சே;
நெருப்பின்மேல் நெருப்பாய் எரியும் கீழுவதுமாகிய நரகத்திற்கு என்னைக்
கொண்டு செலுத்தியமையால், என்னையும் மறந்தாய், நெஞ்சே; இனி, முன்
விரும்பித் தேடியதையெல்லாம் பின்னுக்குத்தள்ளி மறந்து விடுவாய், என்
நெஞ்சே!" என்று கூறி, பெரிதும் அலறி அழுதாள்.
| 53 |
கண்ணீ ராடிக்
கழுவுங் கசடற் றுணர்ந்த ஞானத்
தெண்ணீ ராடித் தெளிந்தா டெளியுண் ணிறைதே
வருளின்
றண்ணீ ராடிக் குளிர்ந்தா டவறா வறமா புணரிக்
குண்ணீ ராடி யுயர்ந்தா ளுருவே றியல்வே றானாள். |
| |
கண் நீர் ஆடிக்
கழுவும் கசடு அற்று, உணர்ந்த ஞானத்
தெண் நீர் ஆடித் தெளிந்தாள்; தெளி உள் நிறை தே
அருளின்
தண் நீர் ஆடிக் குளிர்ந்தாள்; தவறா அற மா புணரிக்-
குள் நீராடி உயர்ந்தாள்; உரு வேறு இயல் வேறு ஆனாள். |
கண்ணீர் சொரிந்து
கழுவத் தக்க குற்றமெல்லாம் நீங்கப் பெற்று,
தான் உணர்ந்த தெய்வ ஞானம் என்னும் தெளிந்த நீரில் மூழ்தித்
தெளிவுகொண்டாள்; தன் உள்ளத்தில் நிறைந்த தெளிந்த தெய்வ
அருளென்னும் குளிர்ந்த நீரில் குளித்துக் குளிர்ச்சி பெற்றாள்; தவறாத
அறவொழுக்கம் என்னும் பெருங் கடலுக்குள் நீராடி உயர்வு கொண்டாள்;
முன் நிலையினின்று தன் உருவமும் வேறாகக் குணமும் வேறாக மாறினாள்.
| 54 |
உள்ளங்
கெடவுட் குடியா யுறைந்த குணுங்கோட் டியபின்
கள்ளங் கெடமெஞ் ஞானங் காட்டிக் கடந்தே கினுங்கான்
வெள்ளங் கெடமல் கருள்சேர் வியன்வான் கிழத்தி நிழலால்
வள்ளங் கெடவுள் வரமெய் தியவம் மடந்தை யொசிந்தாள். |
| |
உள்ளம் கெட
உள்குடியாய் உறைந்த குணுங்கு ஓட்டிய பின்,
கள்ளம் கெட மெய்ஞ் ஞானம் காட்டிக் கடந்து ஏகினும், கான்
வெள்ளம் கெட மல்கு அருள் சேர் வியன் வான் கிழத்தி நிழலால்
வள்ளம் கெட உள் வரம் எய்திய அம் மடந்தை ஒசிந்தாள். |
|