|
தன் உள்ளம்
கெடுமாறு உள்ளே குடிகொண்டு தங்கியிருந்த பேயை
மரியாள் ஒட்டியபின், பொய்யெல்லாம் ஒழியுமாறு மெய்ஞ்ஞானத்தைக்
காட்டிக் கடந்து போயிருப்பினும், காட்டாற்று வெள்ளமும் நிகரற்றவாறு
பெருகும் அருள் கொண்ட பரந்த வானுலகத்தலைவி தொடர்ந்து தந்த
நிழலின் ஆதரவால், அளவற்ற உள் வரங்களை அடைந்த அம்மங்கை
அவ்வளவிற்கும் ஒடுக்கம் கொண்டாள்.
| 55 |
இவ்வா
றெவ்வா றுள்ளங் கெடவெப் பொருளோ வுதவிற்
றவ்வா றன்னா ளகற்றி யட்டைம் பொறியைப் புதைத்து
வவ்வா றொருமா றின்றிப் பலநாள் வானோர்க் கரசாள்
செவ்வா றுளத்துத் திறன்செய் தறஞ்சேர் கதியே சேர்ந்தாள். |
| |
இவ்வாறு, எவ்வாறு
உள்ளம் கெட எப்பொருளோ உதவிற்று,
அவ்வாறு அன்னாள் அகற்றி, அட்டு ஐம்பொறியைப் புதைத்து,
வவ்வு ஆறு ஒரு மாறு இன்றி, பல நாள் வானோர்க்கு அரசாள்
செவ் ஆறு உளத்துத் திறன் செய்து, அறம் சேர் கதியே சேர்ந்தாள்.
|
இவ்வாறு, தன்
உள்ளம் கெடுவதற்கு எப்பொருள் எவ்வாறு
உதவிற்றோ, அவ்வாறு அவள் அப்பொருளைத் தன்னை விட்டு அகற்றி,
ஐம் பொறிகளையும் கொன்று புதைத்து, தான் பற்றிக் கொண்ட மெய்ஞ்ஞான
நெறியில் ஒரு மாறுபாடும் இல்லாமல் நடந்து, வானோர்க்கு அரசியாகிய
மரியாள் தன் உள்ளத்தைப் பல காலம் செவ்வையான நெறியில்
உறுதிப்படுத்தியதின் பயனாக, புண்ணியத்தினால் அடையக்கூடிய மோட்ச
கதியை அடைந்தாள்.
'உள்ளம்
கெட எப்பொருள் எவ்வாறு உதவிற்றோ' என்று மாற்றிக்
கூட்டுக. |