பக்கம் எண் :

முதற் காண்டம்578

               பெத்லேம் பதியார் புறக்கணிப்பு
 
                     56
அப்பால் நடந்தா ரண்டத் திருவஞ் சுடரொத் தன்னா
ரெப்பா லனைத்து மியலுந் தயையா லெதிர்கின் றெவர்க்கு
மொப்பா லடையா மரபா லுயிரா யுடலாய்த் துயர்செய்
வெப்பா லயர்நின் றுயிர்கள் விரிவாய் நிழற்றிப் போனார்.
 
அப்பால் நடந்தார் அண்டத்து இரு அம் சுடர் ஒத்து அன்னார்;
எப்பால் அனைத்தும் இயலும் தயையால், எதிர்கின்ற எவர்க்கும்
ஒப்பால் அடையா மரபால் உயிராய் உடலாய், துயர் செய்
வெப்பால் அயர்கின்ற உயிர்கள் விரிவாய் நிழற்றிப் போனார்.

     வானத்திலுள்ள ஞாயிறும் திங்களுமாகிய அழகிய இரு சுடர்கள்
போன்று சூசையும் மரியாளும் அவ்விடம் விட்டு அப்பால் நடந்தனர்;
எவ்விடத்தும் விளங்கும் கருணையால், எதிர்ப்படுகின்ற எவர்க்கும் ஒப்புக்கூற
இயலாத முறையால் உயிர் போலவும் உடல் போலவும் உதவினர். துன்பம்
தருகின்ற வெப்பத்தால் அயர்கின்ற உயிர்களுக்கெல்லாம் விரிவாக நிழல்
தந்த தன்மையாய்ப் போயினர்.

     எதிர்கின்றவெவர், அயர்கின்ற வுயிர் என்பன முறையே
எதிர்கின்றெவர், அயர்கின்றுயிர் எனத் தொகுத்தல் விகாரம் கொண்டன.
 
                     57
என்பா நிகரா வின்பா லிவையாங் காங்கா லிவரீஇ
மின்பால் வெயில்செய் மிடைவிண் ணவரீ ரையா யிரர்சூழ்ந்
தன்பா லணுகுந் தன்மைத் தைம்வை கலும்வை கியபின்
பொன்பா லுயர்பெத் திலேமாம் பொலிமா புரமண் மினரே.
 
என்பா நிகரா இன்பால் இவை ஆங்கு ஆங்கால் இவரீஇ,
மின்பால் வெயில் செய் மிடை விண்ணவர் ஈர் ஐயாயிரர் சூழ்ந்து
அன்பால் அணுகும் தன் மைத்து, ஐ வைகலும் வைகிய பின்,
பொன்பால் உயர் பெத்திலேம் ஆம் பொலி மா புரம் அண்மினரே.