எரி மாலை தாங்கு
உடலால் பகல் செய் விண்ணோர் இரு
புடையில்
புரி மாலை காண்டால் இலா, வான் மாட்சிப் புலமையினோர்
உரி மாலை காண்டல் இலா, எளிமை போர்த்த உருத்
தோன்றத்
திரி மாலை கண்டவர் தாம் செய்த நிந்தை செப்பல் உற்றாம்: |
ஒளியை மாலையாகச்
சூழ்ந்த உடலினால் பகலைச் செய்யும் வானவர்
இரு பக்கமும் விரும்பிச் செல்லும் வரிசையைக் காணாமலும், வானுலகுக்குரிய
மாண்பினால் பொலியும் ஞானம் படைத்த அவ்விருவருக்கும் உரிய
தகுதியைக் காண மாட்டாமலும், எளிமையை அணிந்த கோலமே வெளிக்குத்
தோன்ற அலைந்து திரியும் இயல்பை மட்டுமே கண்ட அப் பெத்திலேம்
ஊரார் செய்த நிந்தனையைச் சொல்ல முற்பட்டோம்:
| 60 |
மண்சிறையை
யொழித்தவர்தம் வருத்தங் காணா வழிமுடுகித்
தண்சி றைசெய் கடன்மூழ்கிப் பருதி யங்கண் டாழ்ந்தொளிப்ப
வொண்சிறைமொய் யளிகளழ முளரி தன்றா துடன்றடைப்பக்
கண்சிறைசெய் கங்குலுறீஇ நகரிற் சென்றார் கருணைவலார். |
| |
மண் சிறையை
ஒழித்தவர் தம் வருத்தம் காணா, வழி முடுகி,
தண் சிறை செய் கடல் மூழ்கிப் பருதி அங்கண் தாழ்ந்து ஒளிப்ப,
ஓண் சிறை மொய் அளிகள் அழ முளரி தன் தூது உடன்று அடைப்ப,
கண் சிறை செய் கங்குல் உறீஇ நகரில் சென்றார் கருணை வலார். |
இம்மண்ணுலகிற்கு
நேர்ந்த பாவச் சிறையை ஒழிக்க வந்த
அவ்விருவரின் வருத்தத்தைக் காணப் பொறாமல், பகலவன் தன் வழியில்
விரைந்து நடந்து, குளிர்ச்சியைச் சிறை செய்து வைத்திருக்கும் கடலில்
மூழ்கி அங்கே அங்கே தாழப் போய் ஒளிந்து கொண்டது. ஒளி பொருந்திய
சிறகுகளோடு மொய்க்கும் வண்டுகள் அழுமாறு தாமரை தன் இதழ்களைச்
சினத்தோடு மூடி அடைத்துக் கொண்டது. கண்ணைச் சிறை செய்யும் இரவு
வந்து சேர்ந்தது. அப்பொழுது கருணை மிக்க சூசையும் மரியாளும்
பெத்திலேம் நகரினுள் சென்றனர்.
இது
தற்குறிப்பேற்ற அணி. |