| 61 |
சாதியினா
னிகர்க்கரிய மலர்மென் றாளின் றகுதிநலாள்
வீதியினா லெய்தியநோ யாற்ற வெஃகி வெயில்மிடைந்த
வோதியினா லுளத்துயர்ந்தோ னொதுங்குந் தன்மைத்
துறையுளருட்
சோதியினா லவிர்முகத்தி லுறவோர்க் கேட்டுத் துருவினனால். |
| |
சாதியினால்
நிகர்க்க அரிய மலர் மென் தாளின் தகுதி நலாள்
வீதியினால் எய்திய நோய் ஆற்ற வெஃகி, வெயில் மிடைந்த
ஓதியினால் உளத்து உயர்ந்தோன், ஒதுங்கும் தன் மைத்து
உறையுள்,
அருள் சோதியினால் அவிர் முகத்தில், உறவோர்க் கேட்டுத்
துருவினன் ஆல். |
ஒளி செறிந்த
ஞானத்தால் உள்ளத்தில் உயர்ந்த சூசை, சிறு
சண்பக மலராலும் ஒப்பிடற்கரிய மெல்லிய பாதத்தின் அழகு கொண்ட
நல்லவளாகிய மரியாள் வழி நடையால் அடைந்த வருத்தத்தைத் தணிக்க
விரும்பி, அருளொளியால் விளங்கும் முகத்தோடு தன் உறவின்
முறையாரிடம் ஒதுங்குவதற்கான உறைவிடம் கேட்டுத் தேடிக்
கொண்டிருந்தான்.
'சாதியினால்'
என்பதனோடு மலரைக் கூட்டி, 'சாதி மலரினால்'
எனக்கொள்க. 'நிகர்க்கவரிய' என்பது 'நிகர்க்கரிய' என நின்றது
தொகுத்தல் விகாரம். 'ஆல்' அசைநிலை.
| 62 |
அடைப்பதற்கே
யருங்கடலா மவாவுட் பொங்கி யாக்கமிவண்
கிடைப்பதற்கே யுறவுகிளை தேடும் பாலாற் கிளர்நிரப்பிற்
படைப்பதற்கே யரிய பொருட் கொண்டார்க் கல்லாற்
பயன்பயவா
துடைப்பதற்கே யரும் வறுமை யவர்க்கொன் றுண்டோ
சுற்றமதே |
| |
அடைப்பதற்கே
அருங் கடலாம் அவா உள் பொங்கி, ஆக்கம்
இவண்
கிடைப்பதற்கே உறவு கிளை தேடும் பாலால், கிளர் நிரப்பில்
படைப்பதற்கே அரிய பொருள் கொண்டார்க்கு அல்லால், பயன்
பயவா,
துடைப்பதற்கே அரும் வறுமையவர்க்கு ஒன்று உண்டோ சுற்றம்
அதே? |
|