| 66 |
இகழுவரென்
றிகழ்வின்றி யருளுற் றின்னா ரிகழ்ந்தாரும்
புகழுவரென் றாசிநலம் புகன்று வாழ்த்திப் புரை யெண்ணா
நிகழுவரே நெகிழுவரே வணங்கிக் கேட்கி னிந்தையுறீஇ
மகிழுவரே மருட்டுமவா வரிந்து வாய்ந்த மாட்சிநலோர். |
| |
இகழுவர் என்று
இகழ்வு இன்றி அருள் உற்று, இன்னார்
இகழ்ந்தாரும்
புகழுவர் என்று ஆசி நலம் புகன்று வாழ்த்தி, புரை எண்ணா
நிகழுவரே; நெகிழுவரே; வணங்கிக் கேட்கின் நிந்தை உறீஇ
மகிழுவரே, மருட்டும் அவா அரிந்து வாய்ந்த மாட்சி நலோர். |
மயக்கும் ஆசையை
அரிந்து தள்ளி அமைந்த மாட்சி கொண்ட
நல்லோராகிய இவ்விருவரும், அவ்வூரார் இனிமையற்றவராய்த் தம்மை
இகழ்பவரென்று கண்டும் தாம் அவரை இகழ்தலின்றிக் கருணை கொண்டு,
இகழ்ந்தவரையும் புகழ்பவர் போல மதித்து நல்லாசி கூறி வாழ்த்தி, அவர்
குற்றத்தை எண்ணிப்பாராமல் அலைந்து கொண்டிருப்பர்; இடம்
கிடையாமல் ஒவ்வோரிடமாக நெகிழவிட்டுச் செல்வர்; தாம் வணங்கிக்
கேட்டும், நிந்தையே பதிலாகப் பெற்று மகிழுவர்.
| 67 |
தன்னுயிர்சேர்
துயர்கண்டு மகிழ்ந்த நல்லோன் றன்னுயிரி
னின்னுயிர்சேர் துயராற்றா விரும்பி யெங்கு மிரிந்திரப்ப
மன்னுயிர்சே ருறவெமக்குக் சேரா வென்னில் வறியரெனாத்
துன்னுயிர்சே ரிரக்கமெமக் கிலதே னென்னாச் சொலலுற்றான். |
| |
தன் உயிர் சேர்
துயர் கண்டு மகிழ்ந்த நல்லோன், தன் உயிரின்
இன் உயிர் சேர் துயர் ஆற்றா, விரும்பி எங்கு இரிந்து இரப்ப
'மன் உயிர் சேர் உறவு எமக்குச் சேரா என்னில், வறியர் எனாத்
துன் உயிர் சேர் இரக்கம் எமக்கு இலது ஏன்?" என்னாச் சொலல்
உற்றான். |
|