|
தன் உயிருக்கு
நேர்ந்த துயரத்தைக் கண்டு மகிழ்ந்த நல்லவனாகிய
சூசை, தன் உயிரினும் தனக்கு இனிய உயிராகிய மரியாள் அடைந்த
துயரத்தைப் பொறுக்க மாட்டாமல், எங்கும் விருப்பத்தோடு அலைந்து
இரப்பவனாய், "நிலைபெற்ற மனித உயிர்களிடையே அமைந்து கிடக்கும்
உறவுமுறை எமக்கு அமையாது போனாலும், வறியவரென்று வந்து சேர்ந்த
உயிர்களுக்குக் கிடைக்கும் இரக்கமேனும் எமக்கு இல்லாது போயது ஏன்?"
என்று சொல்லலானான்.
| 68 |
அடுத்திரப்பார்க்
கார்வமுற வளித்த நன்றி யஞர்க்கடலே
மடுத்திருப்பக் கரையன்றோ வென்று கூப்பி வணங்கிருகை
யெடுத்திருப்பக் காய்முகனோ டெள்ளுந் தன்மைத்
தெவரெவருங்
கடுத்திருப்பக் கண்ணருவி கடுக நொந்தான் கடிக் கொடியான். |
| |
"அடுத்து இரப்பார்க்கு
ஆர்வம் உற அளித்த நன்றி, அஞர்க் கடலே
மடுத்து இருப்பக் கரை அன்றோ?" என்று கூப்பி வணங்கு இருகை
எடுத்து இருப்ப, காய் முகனோடு எள்ளும் தன் மைத்து எவர்
எவரும்
கடுத்து, இருப்ப, கண் அருவி கடுக நொந்தான் கடிக் கொடியான் |
வாச மலர்க்
கொடியை உடையவனாகிய சூசை, "தம்மை அடுத்து
வந்து இரப்பவர்க்கு ஆர்வத்தோடு வேண்டுவ தொன்றைக் கொடுத்தலாகிய
நன்மை, துன்பம் என்னும் கடலை உள்ளடக்கித் தடுத்து நிற்கவென்று இட்டு
வைத்த கரையாய் அமையும் அல்லவா?" என்று குவித்து வணங்கியதன்
இரண்டு கைகளும் தூக்கிய வண்ணமே இருக்க, அதனைக்கேட்ட
எவ்வெவரும் இகழ்ந்த தன்மையாய் எரிந்த முகத்தோடு கடுத்து இருக்கக்
கண்டு, தன் கண்ணில் அருவி விரைந்து கொட்ட நொந்தான்.
முகன்-முகம்
என்பதன் கடைப் போலி. |