பக்கம் எண் :

முதற் காண்டம்586

                       69
துன்புற்ற காலொருவர்க் கிரங்கிச் செய்த துணையுறுதி
யின்புற்ற காலொருவர் மறந்தா லஃதே யிவர்க்கிறுதி
பின்புற்ற காலுயர்வான் றரும்வித் தென்பான் பெரிதுவப்ப
முன்புற்ற கால்மொழிவாய் ஞான மென்று முனிநகைத்தார்.
 
"துன்பு உற்ற கால் ஒருவர்க்கு இரங்கிச் செய்த துணை உறுதி
இன்பு உற்ற கால் ஒருவர் மறந்தால், அஃதே இவர்க்கு இறுதி
பின்பு உற்ற கால் உயர் வான் தரும் வித்து" என்பான். "பெரிது
                                       உவப்ப
முன்பு உற்ற கால் மொழிவாய் ஞானம்!" என்று முனி நகைத்தார்.

     "துன்பமுற்ற காலத்தில் ஒருவர்க்கு மற்றொருவர் இரங்கிச் செய்த
உதவியாகிய நன்மையை இன்பமுற்ற நாளில் அவ்வொருவர் மறந்தாலும்,
செய்த இவருக்குப் பின்பு வாழ்நாள் முடிவுற்ற காலத்தில் அந்நன்மையே
உயர்ந்த வான் வீட்டைத் தந்துதவும் வித்தாக அமையும்" என்பான் சூசை.
கேட்டவரோ "இதனைக் கேட்டுப் பெரிதும் மகிழும் நோக்கத்தோடு யாம்
உன் முன்வந்து அடுத்த காலத்தில் இந்த ஞானமெல்லாம் எடுத்துக்கூறுவாய்!"
என்று வெறுத்துச் சொல்லி நகைத்தனர்.
 
                      70
நலஞ்செய்வான் விருப்புற்றார் நேரந் தேடார் நசையற்றார்
சலஞ்செய்வார் கிலஞ்செய்யார் வணிக ராக்கம் வரல்வெஃகி
யலஞ்செய்வார் போலுயர்வீ டியற்று நன்றி யமைவதற்கே
தலஞ்செய்வா ரறிவுற்றா ரென்று தாழ்ந்து பணிவானாம்.
 
"நலம் செய்வான் விருப்பு உற்றார் நேரம் தேடார். நசை அற்றார்
சலம் செய்வார், கிலம் செய்யார். வணிகர் ஆக்கம் வரல் வெஃகி
அலம் செய்வார் போல், உயர் வீடு இயற்றும் நன்றி அமைவதற்கே
தலம் செய்வார், அறிவு உற்றார்" என்று தாழ்ந்து பணிவான் ஆம்.