|
கிளைத்தன -
கிளைத்த: பெயரெச்சம் இடையே 'அன்' சாரியை
பெற்று நின்றது. "நிலத்து இயல்பால் நீர் திரிந்து அற்று ஆகு மாந்தார்க்கு,
இனத்து இயல்பது ஆகும் அறிவு" என்ற குறள் (452) ஒப்பிடத்தக்கது.
| 74 |
முற்செய்கை
பயத்ததுய ரகற்றி யெம்மை முயன்றளிக்குந்
தற்செய்கை தளிர்ப்பத்தாழ்ந் திறைவ னிங்கண் டான்மகனாய்
நற்செய்கை யொன்றுமிலா வடியன் றன்னை நண்ணியகால்
மற்செய்கை வீங்குவயத் துயர்ந்தோ னேனும் வருந்தானோ. |
| |
"முன் செய்கை
பயத்த துயர் அகற்றி எம்மை முயன்று அளிக்கும்
தன் செய்கை தளிர்ப்பத் தாழ்ந்து, இறைவன், இங்கண தான்
மகன் ஆய்,
நல் செய்கை ஒன்றும் இலா அடியன் தன்னை நண்ணிய கால்,
மல் செய்கை வீங்கு வயத்து உணர்ந்தோனேனும், வருந்தானோ? |
"ஆண்டவன் வளமான
செயல்களெல்லாம் ஓங்கிய வல்லமையில்
உயர்ந்தோனாயினும், ஆதிப் பெற்றோரின் முற்காலத்துப் பாவச் செய்கை
கொணர்ந்த துயரங்களைப் போக்கி நம்மை முயன்று காக்கும் தன் செய்கை
தழைக்குமாறு, தாழ்மை மேற்கொண்டு, இவ்வுலகில் தான் ஒரு மனிதனாகி,
நற்செயல் ஒன்றுமில்லாத அடியேனை அடைந்த காலத்து, அதற்காக
வருந்தாதிருப்பானோ?
பயத்த-பயந்த,
மல்லல்-வளமை: அது இங்கு 'மல்' எனக் கடை
குறைந்து நின்றது. |