|
இம்மரியாளும்
இவ்விடம் நன்றென்று இசையவே, பெருமை வாய்ந்த
அவ்விருவரும் பேரோலி திரண்டு அலையுள்ள கடலுக்கு நிகராய் விளங்கிய
பழமையான ஊரின் எல்லையைக் கடந்து, இருண்டு அலைத்த நடுச்சாமம்
வானவர் வழங்கிய ஒளியால் மயங்கிப் பகல்போல் தோன்ற, அவ்விடம்
போய்ச் சேர்ந்தனர்.
'இருமையோர்'
என்பதனை 'ஈரற மாண்பினோர்' எனக் கோடலும்
ஒன்று,
| 77 |
காயொளி
காண்கிலான் கையிற் காண்கினெல்
தோயொளி மணிநலந் தோன்று மோவிவ
ராயொளி தெரிவதோ வறிவி லார்க்கெனா
வேயொளி யமரர்சூழ் விரிப்பப் போயினார். |
| |
'காய் ஒளி காண்கிலான்
கையின் காண்கின், எல்
தோய் ஒளி மணி நலம் தோன்றுமோ?
இவர் ஆய் ஒளி தெரிவதோ அறிவு இலார்க்கு?' எனா,
வேய் ஒளி அமரர் சூழ் விரிப்பப் போயினார். |
'காயும் ஒளியைக்
கண்ணால் காண இயலாத குருடன் கையினால்
தடவிக் காண முற்பட்டால், பகலவனில் தோய்ந்துள்ள ஒளியின் அழகு
நலம் புலப்படுமோ?' அறிவில்லாதவர்க்கு இவ்விருவரின் அழகிய
உள்ளொளி தெரியுமோ?' என்று காட்டிய தன்மையாய், வானவர் தாம்
அணிந்துள்ள ஒளியைச் சுற்றிலும் பரப்ப, அவ்விருவரும் போயினர்.
| 78 |
துறவினா
லிரவல ராகித் தோன்றினா
ருறவினா ரினுமுற வெனினு மோர்வரோ
வறவினா வகன்றன ரென்ன வண்டனர்
திறவினா வியம்பிடச் செறிந்து போயினார். |
| |
"துறவினால் இரவலர்
ஆகித் தோன்றினார்,
உறவினாரினும் உறவு எனினும், ஓர்வரோ
அற வினா அகன்றனர்?" என்ன அண்டனர்
திற வினா இயம்பிடச் செறிந்து போயினார். |
|