பக்கம் எண் :

முதற் காண்டம்592

     "துறவினால் இரவலராகத் தோன்றியவர் உறவினரைக் காட்டிலும்
தமக்கு உறவுள்ளவர் என்று இருப்பினும், அறத்தைப்பற்றி விசாரித்தலை
விலக்கியவர் அதனை உணர்வரோ?" என்று வானவர் திறமான சொல்லை
எடுத்துக் கூற, இருவரும் அவ்வானவரோடு நெருங்கி நடந்து போயினர்.


               79
பூரியர் கணுமுள பொருள்செய் செல்வநீத்
தாரியர் விரும்பிய வருளின் செல்வமாய்ச்
சீரியர் வழியிதே யென்னச் சேண்டள
வீரியர் விருப்பெழீஇ விளம்பிப் போயினார்.
 
"பூரியர்கணும் உள பொருள்செய் செல்வம் நீத்து,
ஆரியர் விரும்பிய அருளின் செல்வம் ஆய்,
சீரியர் வழி இதே!" என்ன, சேண்தள
வீரியர், விருப்பு எழீஇ விளம்பிப் போயினார்.

     வானகப் படை வீரராகிய வானவர். "கீழோரிடமும் காணப்படும்
பொருளாகிய செல்வத்தைத் துறந்து, மேலோர் விரும்பிய அருட் செல்வம்
அமையப் பெற்ற, சிறந்தோர் கைக் கொள்ளத்தகும் நெறி இதுவே!" என்று,
விருப்பம் மேலோங்கக் கூடி இருவரும் சென்றனர்.
 
             80
எல்லெனச் சுடரவி ழீரை யாயிரம்
யில்லெனக் கவினுரு விரிவிண் ணோருறீஇ
யல்லெனப் பகலென வறிகி லாதுவான்
செல்லெனக் கழிப்பெழீஇச் சிறந்து போயினார்.
 
எல் எனச் சுடர் அவிழ், ஈரையாயிரம்,
வில் எனக் கவின் உரு விரி, விண்ணோர் உறீஇ,
அல் எனப் பகல் என அறிகிலாது, வான்
செல் எனக் களிப்பு எழீஇச் சிறந்து போயினார்.

     பகலவன் போல் ஒளி பரப்பி வானவில் போன்ற அழகிய உருவத்துடன்
திரண்டு நின்ற பதினாயிரம் வானவர் தம்மோடு சேர்ந்து வர, இரவென்றும்
பகலென்றும் வேறுபாடு அறிய இயலாமல், வானத்தில் நடந்து செல்வது
போல் அவ்விருவரும் மகிழ்ச்சி மேலோங்கக் சிறப்போடு சென்றனர்.