| 81 |
கோளைவாய்ப்
புகழ்தரக் கோல வானவர்
பாளை வாய்க் கமுகுபாய் பலவின் காயறச்
சூளை வாய்ப் பொய்யெனத் துளித்த தேன்செயு
மூளை வாய்த் தண்பொழில் கடந்து முன்னினார். |
| |
கோள் ஐ வாய்ப்
புகழ் தரக் கோல வானவர்,
பாளை வாய்க் கமுகு பாய் பலவின் காய் அறச்
சூளை வாய்ப் பொய் எனத் துளித்த தேன் செயும்
மூளை வாய்த் தண் பொழில் கடந்து முன்னினார். |
அழகிய வடிவமுள்ள
வானவர் ஒளியும் அழகும் பொருந்திய தம்
வாயினால் புகழ்ந்து கொண்டு வரவே, பாளை கொண்ட கமுகு சாய்ந்து
விழுவதினால் பலாப் பழம் அறுந்து விழுந்து வேசியின் வாயினின்று
பிறக்கும் பொய் போல் மிகுதியாகத் தேனைத் துளிப்பதனால் சேறாகிக்
கிடந்த குளிர்ந்த சோலையைக் கடந்து அவ்விருவரும் முன்னேறிச்
சென்றனர்.
| 82 |
கள்ளுடைக்
கயத்ழெங் கமலப் பொய்கையும்
புள்ளுடைக் கனியினாற் பொலிந்த சோலையு
முள்ளுடைப் புடைகடந் துளத்தி லுன்னிய
வெள்ளுடைப் புறநிலை யிமிழி லெய்தினார். |
| |
கள் உடைக் கயத்து
எழும் கமலப் பொய்கையும்,
புள் உடைக் கனியினால் பொலிந்த சோலையும்
உள் உடைப் புடை கடந்து, உளத்தில் உன்னிய
எள் உடைப் புற நிலை இமிழில் எய்தினார். |
தேன் கலந்த
நீர் நிறைந்து நிற்கும் தாமரைத் தடாகத்தையும்,
பறவைகளை நிறையக்கொண்டு பழங்களால் பொலிந்த சோலையையும்
உள்ளே கொண்டுள்ள இடங்களையெல்லாம் கடந்து, தாம் மனத்தில்
கருதிய இகழத்தக்க புறம்பான இடத்தை அவ்விருவரும் இன்பத்தோடு
சென்றடைந்தனர்.
|