| 87 |
ஆவருள்
தீதுள வகமும் வந்தடை
தேவருள் புக்கபின் சீர்த்த பான்மையா
னோவருள் முழையிவர் நுழைந்த காலலர்க்
காவருள் வனப்பொடு களித்த தாமரோ. |
| |
ஆவு அருள் தீது
உள அகமும் வந்து அடை
தே அருள் புக்க பின் சீர்த்த பான்மையால்,
நோவு அருள் முழை இவர் நுழைந்த கால், அலர்க்
கா அருள் வனப்பொடு களித்தது ஆம் அரோ. |
ஆசை தேடித் தருகின்ற
தீமை கொண்ட மனமும் தன்னை
வந்தடைந்த தெய்வ அருள் உள்ளே புகுந்தபின் சிறப்படையுந்
தன்மைபோல், துன்பம் தருவதாகிய அக்குகை இவ்விருவரும் உள்ளே
நுழைந்தபோது, பூஞ்சோலை தரும் அழகோடு களித்தது போல்
தோன்றுவதாம்.
| 88 |
தணிவருஞ்
சினத்தொடு தகைத்த கற்றினா
ரணிவருங் குணத்திலீங் கமல னாடிய
பணிவரு மிடிநலம் பயக்கின் றாரெனாத்
துணிவரு மன்பெழுந் தாசி சொற்றினார். |
| |
தணிவு அருஞ் சினத்
தொடு தகைத்து அகற்றினார்,
அணிவு அருங் குணத்தில் ஈங்கு அமலன் நாடிய
பணிவு அரு மிடி நலம் பயக்கின்றார் எனா,
துணிவு அரும் அன்பு எழுந்து, ஆசி சொற்றினார். |
தணித்தற்கரிய
சினத்தோடு தம்மை உள்ளே விடாமல் தடுத்து
விலக்கிய அந்நகரத்தார், பூண்பதற்கு அரிய பெருங்குணத்தோடு இவ்வுலகில்
ஆண்டவன் நாடிய தாழ்மையான அரிய வறுமை என்னும் நலத்தையே தந்து
உதவுகின்றனர் எனக் கொண்டு, துணிவதற்கு அரிய அன்பு மேலோங்கி,
அவர்களுக்கு வாழ்த்துக் கூறினர்.
|