பக்கம் எண் :

முதற் காண்டம்598

                 91
அய்யனை யிறைஞ்சிய வமையத் தொண்டவன்
பொய்யனை யுடனிலை மறந்து பொற்புறீஇ
மெய்யனை யுளம்வளர்த் தேவன் மேவிவிண்
பெய்யனை யருவிகண் பிளிர்ந்தின் போங்கினான்,
 
அய்யனை இறைஞ்சிய அமையத்து ஒண்தவன்,
பொய் அனை உடல் நிலை மறந்து பொற்பு உறீஇ,
மெய் அனை உளம் வளர்ந்து, ஏவல் மேவி, விண்
பெய் அனை அருவி கண் பிளிர்ந்து, இன்பு ஓங்கினான்.

     ஒளிரும் தவத்தோனாகிய சூசை ஆண்டவனை வணங்கி நின்ற
வேளையில், பொய்யை ஒழித்தல் போல் தன் உடல் நிலையை மறந்து
பொலிவு கொண்டு, மெய்யை வளர்ப்பது போல் தன் உள்ளம் வளர்ச்சி
கொண்டு, அவ்வாண்டவன் ஏவலை விரும்பித் தேடி, மேகம் பொழிவது
போன்ற அருவி நீரைத் தன் கண்களில் பொழிய விட்டு, இன்பத்தில்
ஓங்கினான்.

            தெய்வக் குழந்தையின் பிறப்பு நிகழ்ச்சி

     - மா, கூவிளம், - மா, கூவிளம்
 
              92
பொதிர்த ருங்களி பொழிந்து வாய்ந்தருள்
முதிர்த ருங்கணாள் முழந்தி னின்றிவண்
ணெதிர்த ரும்பொரு வின்றி யின்புறக்
கதிர்த ருஞ்சுத னசையக் கண்டனள்.
 
பொதிர் தரும் களி பொழிந்து, வாய்ந்து அருள்
முதிர் தரும் கணாள் முழந்தின் நின்று, இவண்
எதிர் தரும் பொருவு இன்றி இன்பு உற,
கதிர் தரும் சுதன் அசையக் கண்டனள்.