தாவிப் படர்ந்த
மரக் கொம்புகளில் நிறைந்து கிடந்த புதுமலர்கள்,
தடாகத்தில் நிறைந்து கிடந்த தாமரை மலர்கள் போல குளிர்ச்சியோடு
விளங்கின; பாவிகள் அந்நாட்டில் இயங்க முடியாத நற்பயனை இயல்பாகவே
அது கொண்டுள்ளமையால், பாக்களிடையே புலவர்கள் இயங்க விடும்
நால்வகைப் பயன்களில் எப்பயன் அங்கே சால்புடையதாகும்?
'அரோ' அசைநிலை.
''அறம் பொருள் இன்பம் வீடு அடைதல்
நூற்பயனே,'' என்பது (நன். 10) விதியாகலின், ஒன்றினொன்று விஞ்சியதாகக்
கொள்ளற்கு இடமின்றி, நான்குமே அங்குச் சிறந்து நின்றமையால், எதனை
மேம்படுத்திப் புலவர் பாடுவரென்பது கருத்து.
83 |
பார
ணிந்தவ ணிக்கலப் பான்மையாற்
சீர ணிந்தசெ ழுந்தட நாட்டிடை
மார ணிந்தணி மாமணி மானிய
வேர ணிந்தந கர்க்கிய லேற்றுவாம். |
|
பார்
அணிந்த அணிக்கலப் பான்மையால்
சீர் அணிந்த செழுந் தட நாட்டு இடை,
மார் அணிந்த அணி மா மணி மானிய
ஏர் அணிந்த நகர்க்கு இயல் ஏற்றுவாம். |
இப்பூவுலகம்
அணிந்துள்ள அழகிய அணிகலன்போல, சிறப்புக்க
ளெல்லாம் ஒருங்கே அணிந்துள்ள செழுமையான பெருமை வாய்ந்த சூதேய
நாட்டில், அது தன் மார்பில் அணிந்த அழகிய பெரிய மணி போன்ற அழகு
புனைந்த எருசலேம் நகர்க்கு உரிய இயல்பைத் தொடர்ந்து போற்றுவோம்.
மூன்றாம்
அடியில், அணிந்த + அணி - 'அணிந்தவணி' என
வரவேண்டியது, 'அணிந்தணி' எனத் தொகுத்தல் விகாரம் கொண்டது.
நாட்டுப்
படலம் முற்றும்
ஆகப்
பாடல் 96
|