|
மூன்று உலகங்களிலும்
இதற்கு ஓர் ஒப்புமை இல்லாத தன்மையாய்,
முக்காலங்களிலும் பழுதில்லாக் கன்னியாய்த் தான் இருந்தே, அளவில்லாத
தெய்வ மூன்றாட்களுள் நடுப்பட்டு நிற்கும். மகனாம் ஆண்டவனை,
முச்சுடர்களினும் சிறந்து விளங்க மரியாள் பெற்றெடுத்தாள்.
தந்தை மகன்
தூய ஆவி என்ற மூவாள் ஓர் கடவுளுள் மகன்
நடுவாக விளங்குதல் காண்க. மரியாள் மகனைப் பெறு முன்னும் பெற்ற
போதும் பெற்ற பின்னுமாக முப்பொழுதும் கன்னியாகவே விளங்கினாள்.
| 95 |
வாய்ப்ப
டாநுழை பளிங்கின் வாய்கதிர்
போய்ப்ப டாவொளி படரும் போன்றுதாய்
நோய்ப்ப டாதருங் கன்னி நூக்கிலா
தாய்ப்ப டாவயத் தமலன் றோன்றினான். |
| |
வாய்ப் படா
நுழை பளிங்கின் வாய் கதிர்
போய்ப் படா ஒளி படரும் போன்று, தாய்
நோய்ப் படாது, அருங் கன்னி நூக்கு இலாது,
ஆய்ப் படா வயத்து அமலன் தோன்றினான். |
கண்ணாடியிடத்து
வாயில் இல்லாமல் நுழையும் பகலவனின் கதிர்
உள்ளே போய்க் கெடாத ஒளியைப் பரப்புதல் போன்று, எக்குற்றமுமற்ற
ஆண்டவன் ஆராய்ச்சிக்கு எட்டாத வல்லமையோடு, தன் தாய் பேறுகால
நோவு அடையாமலும், அவளது அரிய கன்னிமைக்கு அழிவில்லாமலும்
மகனாய்ப் பிறந்து தோன்றினான்.
| 96 |
மாத
மார்கழி வைக லையைந்தா
யேதி லாநிசிக் கிருத்தை மூவைந்தா
யாதி நாளென வாதி நாதனைக்
காத னாயகி களிப்பி னல்கினாள். |
| |
மாதம்
மார்கழி வைகல் ஐ ஐந்து ஆய்,
ஏது இலா நிசிக்கு இருத்தை மூ ஐந்து ஆய்,
ஆதி நாள் என, ஆதி நாதனைக்
காதல் நாயகி களிப்பின் நல்கினாள், |
|