பக்கம் எண் :

முதற் காண்டம்602

பதிப்பித்தோம், பழைய விருத்தமோவெனில், மற்றைச் சில கையெழுத்துப்
பிரதிகளில் இருக்கிறபடியால், அதன் உரையோடு அதனை இவ்விடத்தில்
தருகின்றோம்" என்று குறிப்பிட்டு, "பகரப் பானுயர்" என்று தொடங்கும்
பாடலை உரையுடன் தந்துள்ளார். இப்பாடலில் வரும் மகர ராசி தை
மாதத்திற்கு உரியதாதலின், "மார்கழி வைகல் ஐயைந்து" என்று 96 ஆம்
பாடலில் குறித்ததனோடு பொருந்துமாறில்லை. இவ்வடிக்குறிப்பு
தெளிவற்றிருப்பதனோடு, வீரமாமுனிவரே உரையும் செய்தாரென்ற
பிழைபட்ட கருத்திற்கும் இடம் தருகின்றது. எனினும், அப்பாடலையும்
உரையையும் கீழே தருவோம்:

     "பகரப் பானுயர் பகல்செய் தேரெழீ
     மகரத் தேகையின் மகர யாழ்மொழி
     புகரற் றாயினள் பொழிந்த பாலக
     னிகரற் றாதவ னிகரத் தோன்றினான்.

     "உரை: பகலைச் செய்யுந் தேரிலெழுந்த சூரியன் மகரராசியில்
நடக்கும்போது மகர யாழின் ஒத்த இனிய மொழியைக் கொண்ட
குறையில்லாத கன்னி தந்த குழந்தை நிகர்வு ஒன்றின்றிச் சூரியன்
உதித்தாற்போலத் தானும் உதித்துத் தோன்றினான் என்ப".
 
               98
தோன்றி னானென நசையு டூண்டினாற்
போன்று வாவுதேர் முடுக்கிப் போயொளி
கான்றி ராசிவங் களிப்ப மாலியெல்
யீன்றி ராவன்று குறுகிற் றென்னவே.
 
தோன்றினான் என நசை உள் தூண்டினாற்
போன்று, வரவு தேர் முடுக்கிப் போய் ஒளி
கான்று, இராசிவம் களிப்ப, மாலி எல்
ஈன்று, இரா அன்று குறுகிற்று என்னவே.

     ஆண்டவன் இவ்வுலகில் தோன்றினான் என்ற ஆசை தன்னைத்
தூண்டினாற் போல, ஆதவன் தாவிப் பாயும் குதிரைகள் பூட்டிய தேரை
முடுக்கிப் போய் ஒளியைப் பொழிந்து பகலைச் செய்தமையால், அன்று
இரவுப் பொழுது குறுகிற்றென்று தாமரை மொட்டுகள் மலர்ந்து களிக்கும்.