|
'திளைத்தது'
என்ற சொல் இடைக்குறையாய், 'திளைத்து' என நின்றது.
அடுத்து வரும் பாடலில் 'களித்து' என்பதனையும் இது போற் கொள்க.
| 105 |
பண்ணி
னோதையும் பண்ணிற் பாவிசை
தண்ணி னோதையுந் தாழ்ந்து வாழ்த்தினர்
விண்ணி னோதையும் வழங்க வேட்டுளங்
கண்ணி னோகையிற் களித்தோர் பாலெலாம். |
| |
பண்இன் ஓதையும்,
பண்ணில் பா இசை
தண்இன் ஓதையும், தாழ்ந்து வாழ்த்தினர்
விண்இன் ஓதையும் வழங்க, வேட்டு உளங்
கண்இன் ஓகையின் களித்து ஓர் பால் எலாம். |
வீணையின் இனிய
ஒசையும், வீணையில் பாடலை இசைத்துப் பாடும்
குளிர்ச்சியான இனிய ஒசையும், பணிந்து வாழ்த்திய வானவரின்
விண்ணுலகிற்குரிய இனிய ஒசையும் கூடி இயங்குதலால், ஒரு
பக்கமெல்லாம் உள்ளத்தில் இனிய மகிழ்ச்சியால் விரும்பிக் களித்தது.
| 106 |
பொன்னி
னொள்ளுருப் பொருந்திப் பூணொடு
மின்னி னொண்ணுதல் மின்னி வீழ்தரத்
துன்னின் புள்ளெழத் தொழுது போற்றலி
னின்னின் பார்ந்தன வினிதோர் பாலெலாம். |
| |
பொன்னின் ஒள்
உரு பொருந்தி, பூணொடு
மினனின் ஒள் நுதல் மின்னி, வீழ்தரத்
துன் இன்பு உள் எழத் தொழுது போற்றலின்,
இன் இன்பு ஆர்ந்தன இனிது ஓர் பால் எலாம். |
பொன்
போல் ஒளி பொருந்திய உருவம் கொண்டு, பூண்ட
அணிகலன்களும் ஒளியுள்ள நெற்றியும் மின்னல் போல் மின்ன, செறிந்த
இன்பம் உள்ளத்தில் பொங்கியெழ வானவர் விழுந்து தொழுது
வாழ்த்துதலினால், ஒரு பக்கமெல்லாம் இனிய இன்பங்கள் இனிதாக
நிறைந்து நின்றன.
|