|
தன் தந்தையாகிய
ஆண்டவனையே மகனாகப் பெற்றெடுத்த
அத்தாயும், பிறைமதி போன்ற நெற்றி படத் தாழ்ந்து தன் மகனை
வணங்கியபின், உணர்வு பொங்கிய அவ்வானவர், யாவற்றிற்கும் முந்திய
தந்தையாம் கடவுளின் மகனை அவளது செந்நிறக் கைகளில் தந்து, முன்
நின்று போற்றினர்.
| 113 |
காந்த
ணேரிய செங்கரத் தேந்தின
ளேந்த மார்பி லிறுகவுஞ் சேர்த்தனள்
வாய்ந்த பூம்பத நீவிவ ணங்கின
ளாய்ந்த நூற்கடந் தாருணர் வெய்தினாள். |
| |
காந்தள் நேரிய
செங்கரத்து ஏந்தினள்;
ஏந்த, மார்பில் இறுகவும் சேர்த்தனள்;
வாய்ந்த பூம் பதம் நீவி வணங்கினள்,
ஆய்ந்த நூல் கடந்து ஆர் உணர்வு எய்தினாள். |
அத் தாய், கார்த்திகைப்
பூப் போன்ற தன் செந்நிறக் கைகளில்
அம்மகனை ஏந்தினாள்; ஏந்தி, மார்போடு இறுக அணைத்துக் கொண்டாள்;
அழகு வாய்ந்த மலர் போன்ற அடிகளைத் தடவிக் கொடுத்து வணங்கினாள்.
ஆராய்ந்த நூல்களின் அறிவெல்லாம் கடந்து நிறைந்த ஞான உணர்வு
அடைந்தாள்.
| 114 |
காவி
மேற்கமழ் கஞ்சம மைந்தெனா
வாவி யாமக வங் கையி லேந்தின
ளோவி மாழ்கிய மன்னுயி ரோர்ந்தருள்
மேவி முந்தையை நோக்கிவி ளம்புவாள். |
| |
காவி மேல் கமழ்
கஞ்சம் அமைந்து எனா,
ஆவி ஆம் மகவு அம் கையில் ஏந்தினள்;
ஓவி மாழ்கிய மன் உயிர் ஓர்ந்து, அருள்
மேவி, முந்தையை நோக்கி விளம்புவாள் : |
|