பக்கம் எண் :

முதற் காண்டம்613

               119
என்ன நல்லுயிர் காத்தம ருந்தெனா
மன்ன நல்லருள் வாய்ந்தன ளின்னணஞ்
சொன்ன நல்லுரை தேன்சுவை யிற்சுவை
யன்ன வுண்குழ விநகை யாடினான்.
 
என்ன, நல் உயிர் காத்த மருந்து எனா
மன்ன நல் அருள் வாய்ந்தனள், இன்னணம்,
சொன்ன நல் உரை தேன் சுவையிற் சுவை
அன்ன உண் குழவி நகை ஆடினான்.

     என்று இவ்வாறெல்லாம், நல்ல உயிரைக் காத்த மருந்து போல்
அமையுமாறு நல்ல அருள் வாய்ந்த மரியாள் சொன்ன நன்மொழியைத்
தேன் சுவையினும் சுவையுடையதுபோல உண்டு மகிழ்ந்த குழந்தை நாதன்
புன்னகை காட்டினான்.
 
                 120
நகைசெய் தன்மையி னம்பெழீஇத் தாய்துகட்
பகைசெய் நெஞ்சமும் பற்றலு மொன்றுற
முகைசெய் மேனி தழுவிமுத் திட்டலுங்
குகைசெய் யின்பெழக் கோலமிட் டொத்ததே.
 
நகை செய் தன்மையின், நம்பு எழீஇத் தாய், துகட்
பகை செய் நெஞ்சமும் பற்றலும் ஒன்று உற,
முகை செய் மேனி தழுவி முத்து இட்டலும்,
குகை செய் இன்பு எழக் கோலம் இட்டு ஒத்ததே.

     குழந்தை நாதன் புன்னகை காட்டிய தன்மையால், தாயாகிய
மரியாள் ஆசை பொங்கி எழவே, பாவத்தைப் பகைத்த தன் நெஞ்சமும்
தன் ஆர்வமும் ஒன்றாகக் கலந்து, பூ அரும்பின் சாயலான திருமகனின்
உடலை அணைத்து முத்தமிடவும், அந்தக் குகை கொண்ட இன்பம்
பொங்கி எழுதலால் கோலமிட்டது போல் தோன்றியது.
 
                121
தெருள்சு ரந்ததி ரைப்புவி யார்ந்துணப்
பொருள்சு ரந்துயிர்க் குண்டிபொ ழிந்தனன்
மருள்சு ரந்தவ டுக்கெட மைந்தனா
யருள்சு ரந்தமு தாய்தர நுங்கினான்.