பக்கம் எண் :

முதற் காண்டம்614

தெருள் சுரந்த திரைப் புவி ஆர்ந்து உணப்
பொருள் சுரந்து உயிர்க்கு உண்டி பொழிந்தனன்,
மருள் சுரந்த வடுக் கெட மைந்தன் ஆய்,
அருள் சுரந்து அமுது ஆய் தர நுங்கினான்.

     தெளிந்த தன்மையுள்ள கடல் சூழ்ந்த இவ்வுலகம் முழுவதும் நிறைவாக
உண்பதற்கான பொருள்களை விளைவித்து உயிர்களுக்கெல்லாம் உணவைப்
பொழிந்து தரும் ஆண்டவன், மயக்கத்தால் வந்து சேர்ந்த பாவங்களைத்
தீர்க்குமாறு மனிதன் ஆகி, தன் தாய் அருள் சுரந்து பால்தரத் தான்
அதனை உண்டான்.
 
                 122
வேழ்வி மந்திரத் தீக்கொடி வேடமாய்க்
கேழ்வி யொண்டவன் காட்சிகி ளர்ப்பினால்
வாழ்வி னின்றுழி வாய்ந்திவை யாவையுந்
தாழ்வி லின்புறக் கண்டரு டாங்கினான்.
 
வேழ்வி மந்திரத் தீக் கொடி வேடமாய்,
கேழ்வி ஒண் தவன், காட்சி கிளர்ப்பினால்,
வாழ்வில் நின்ற உழி, வாய்ந்த இவை யாவையும்,
தாழ்வு இல் இன்பு உறக் கண்டு அருள் தாங்கினான்.

     கேள்வி அறிவு படைத்த ஒள்ளிய தவத்தோனாகிய சூசை, தான்
பெற்றிருந்த தெய்வக் காட்சி வரத்தின் மேன்மையால், இவ்வுலக வாழ்வில்
நிலைபெற்றிருந்த போதே, நிகழ்ந்த இவை எல்லாவற்றையும், வேள்வியில்
மந்திரத்தோடு எழுந்த தீக் கொழுந்தின் தோற்றமாய்க் குறையற்ற இன்பம்
பொருந்தக் கண்டு, தெய்வ அருளைப் பெற்று நின்றான்.

     வேள்வி, கேள்வி என்பன, எதுகைப் பொருட்டு, வேழ்வி, கேழ்வி
என மாறி நின்றன. நின்றவுழி, வாய்ந்தவிவை என்பன, தொகுத்தல்
விகாரமாய், நின்றுழி, வாய்ந்திவை என வந்தன.
 
                123
வேத நின்றவு ருத்தகு மேன்மையான்
காத னின்றிவை காட்சியிற் காண்கினு
நாத னின்றந லம்விழி யாலுணச்
சீத ணிந்தவன் வாவெனச் சென்றுளான்.