வேதம் நின்ற
உருத் தகு மேன்மையான்,
காதல் நின்று இவை காட்சியின் காண்கினும்,
நாதன் நின்ற நலம் விழியால் உண,
சீது அணிந்தவள், "வா" என, சென்று உளான். |
வேதமே உருவெடுத்து
நின்றாற் போன்ற மேன்மையுள்ள சூசை,
ஆசையோடு நின்று இவற்றை யெல்லாம் காட்சியாகக் கண்டானாயினும்,
விண் மீன்களை முடியாக அணிந்த மரியாள், "வா" என்று தன்னை
அழைத்த பின்னரே, குழந்தை நாதனிடம் அமைந்து கிடந்த அழகு
நலத்தைத் தன் கண்களால் பருகுமாறு அடுத்துச் சென்றான்.
சூசை
கையில் குழந்தை நாதன்
தேமா,
கூவிளம், தேமா, கூவிளம், தேமா, கூவிளம், கூவிளம்
124 |
இந்து நேர்நுதல்
மீன்க ணேர்விழி யிண்டை நேர்முக
நீர்மையாற்
கந்த நேர்நளிர் தாது நேருடல் காட்டு நாதனை யம்புயச்
சந்த நேரிய கன்னி நேர்கையி றாம நேரிய முத்தெனச்
சிந்து நேர்நய மூழ்கு சீர்மையி றேற நோக்கினன் சூசையே. |
|
இந்து நேர் நுதல்
மீன்கள் நேர் விழி இண்டை நேர் முக
நீர்மையால்,
கந்தம் நேர் நளிர் தாது நேர் உடல் காட்டு நாதனை, அம்புயச்
சந்தம் நேரிய கன்னி நேர் கையில், தாமம் நேரிய முத்து என,
சிந்து நேர் நயம் மூழ்கு சீர்மையில் தேற நோக்கினன், சூசையே. |
பிறைமதி போன்ற
நெற்றியும் விண்மீன்களை ஒத்த கண்களும்
தாமரை மலர்போன்ற முகமும்கொண்ட தன்மையால், மணம் பொருந்திய
குளிர்ந்த மலர் போன்ற உடலைக் காட்டிய குழந்தை நாதனை, தாமரை
மலரின் அழகு பொருந்திய கன்னித் தாயின் நீட்டிய கையில், சூசை,
மாலையில் பதித்து வைத்த முத்துப் போல, கடல் போன்ற இன்பத்தில்
மூழ்கிய தன்மையாய்த் தெளியுறக் கண்டான்.
|