பக்கம் எண் :

முதற் காண்டம்616

                      125
வீழ்ந்து வீழ்ந்தக னெற்றி பாரிடை மேவ லோடுற வீழ்ந்தனன்
றாழ்ந்து தாழ்ந்திரு தாம ரைக்கழ றாழ்த லார்தலி றாழ்ந்தனன்
சூழ்ந்து சூழ்ந்துள வின்ப றாமழை தூவ நீண்விழி வாழ்ந்தனன்
வாழ்ந்து வாழ்ந்துயர் வானு ளோர்மன வாய்வி யப்புற
                                    வோங்கினான்.
 
வீழ்ந்து வீழ்ந்து, அகல் நெற்றி பாரிடை மேவலோடு உற
                                     வீழ்ந்தனன்;
தாழ்ந்து தாழ்ந்து, இரு தாமரைக் கழல் தாழ்தல் ஆர்தல் இல்
                                     தாழ்ந்தனன்;
சூழ்ந்து சூழ்ந்து, உள இன்பு அறா, மழை தூவ நீண்விழி
                                     வாழ்ந்தனன்;
வாழ்ந்து வாழ்ந்து, உயர் வான் உளோர் மனம் வாய் வியப்பு
                                     உற ஓங்கினான்.

     குழந்தை நாதனின் முன் விழுந்து விழுந்து, தன் பரந்த நெற்றி
தரையோடு தரையாய்ப் பொருந்த விழுந்தான்; வணங்கி வணங்கி, இரு
தாமரை மலர் போன்ற கால்களை வணங்கி நிறைவு பெறுதலின்றி
வணங்கினான்; ஆராய்ந்து ஆராய்ந்து, உள்ளத்தில் இன்பம் நீங்காத
தன்மையாய், தன் நீண்ட கண்கள் நீரை மழையாய்ப் பொழிய, வாழ்வு
பெற்றவனானான்; வாழ்வு பெற்றுப் பெற்று, உயர்ந்த வானுலகில் உள்ளோர்
மனமும் வாயும் வியப்புக் கொள்ளுமாறு வாழ்வு பெற்றான். வானோர்
மனத்தால் நினைந்தும் வாயால் புகழ்ந்தும் வியப்புக் கொண்டனர்.
 
                      126
அன்பு றக்கட லென்றெ லாவுயி ராண்ட ளித்தரு ணாயகி
துன்பு றத்துணை யாய மாண்பரு டுற்று மார்புடை மாதவ
னின்பு றந்துணை யாத லாமென வின்றெ ழுந்துறை நாதனை
யன்பு றத்திடை யேந்து கென்றல ரொத்த செங்கர நீட்டினாள்.