விண்ணுலகத்தில்
உயர்ந்த தன் ஒரே ஆணையால் ஆளும்
அரசர்க்கரசனாகிய ஆண்டவனை, தன் உள்ளத்தில் வணக்கம் மிகுதியாகக்
கொண்டிருந்தமையால், அணுகித் தன் கையில் எடுத்து வைத்துக் கொள்ளச்
சூசை நாணிக் கூசினான்; மண்ணுலகில் தனக்கு ஒப்பற்ற மங்கை மரியாள்
கூறிய பொருத்தமான சொல்லைக் கொண்டு பின் தேறினான்; தன்
கண்ணிடத்துப் பொருந்திய கண்ணீர் மழையோடு, இரு கைகளிலும் ஏந்தி
எடுத்துக்கொண்டான்.
'தேறினன்' என
முன் கூறவே, பொழிந்த கண்ணீர் மகிழ்ச்சிக்
கண்ணீர் என அறிக.
128
|
கைத்த
லத்திலெ டுத்து மார்பொடு காத லோங்கவ ணைத்தலு
முத்த மிட்டலு நோக்கி றீட்டலு முற்ற நீரின னைத்தலுஞ்
சித்த முற்றலு நாண்ம லர்க்கழல் சென்னி யின்மிசை வைத்தலு
மித்தி றத்திலு முண்ம கிழ்ந்துறு மின்ப மெல்லையு மில்லையே. |
|
கைத் தலத்தின்
எடுத்து மார்பொடு காதல் ஓங்க அணைத்தலும்,
முத்தம் இட்டலும், நோக்கில் தீட்டலும், உற்ற நீரில் நனைத்தலும்,
சித்தம் முற்றலும், நாள் மலர்க் கழல் சென்னியின் மிசை வைத்தலும்,
இத் திறத்திலும் உள் மகிழ்ந்து உறும் இன்பம் எல்லையும் இல்லையே. |
கையிடத்துத்
திருக் குழந்தையை எடுத்து அன்பு பொங்க மார்போடு
அணைத்தலும், முத்தமிடுதலும், கண்ணில் ஒற்றுதலும், வந்த கண்ணீரில்
நனைத்தலும், மனம் நிறைவு பெறுதலும், அன்றலர்ந்த தாமரை மலர் போன்ற
காலடிகளைத் தலை மேல் ஏற்றி வைத்தலுமாக, இவ்வாறெல்லாம் சூசை தன்
உள்ளம் மகிழ்ந்து அடையும் இன்பத்திற்கு எல்லையே இல்லை.
129 |
கோதை வாகையை
நீழ லாரடி கோதை யாகவ ணிந்தகைத்
தாதை யான்றனை நோக்கு மன்பொடு தாவு ளத்துல வின்பதி
னோதை யார்கலி யோட வோர்நகை யுற்ற பாலக னொண்முகப்
பாதை யாற்களி யெய்தி மொய்த்தன பாரோ டும்பர்கள்
பாலெலாம். |
|