பக்கம் எண் :

முதற் காண்டம்619

கோதை வாகையை நீழல் ஆர் அடி கோதையாக அணிந்த கைத்
தாதையான்தனை நோக்கும் அன்பொடு, தாவு உளத்து உலவு
                                        இன்பதின்
ஓதை ஆர்கலி ஓட ஓர் நகை உற்ற பாலகன் ஒண்முகப்
பாதையால் களி எய்தி, மொய்த்தன பாரோடு உம்பர்கள் பால்
                                        எலாம்.

     மாலை போன்ற தன் மலர்க் கொடியை ஒளி நிறைந்த பாதங்களில்
மாலையாகச் சூட்டினான் வளர்ப்புத் தந்தையாகிய சூசை, பாலகனாகிய
ஆண்டவன் அவனை நோக்கும் அன்போடு, தன் உள்ளத்தில் தாவி
உலாவும் இன்பமாகிய ஒசையுள்ள கடல் பாய்ந்து ஒட ஒரு புன்னகை
காட்டினான். புன்னகை காட்டிய அப்பாலகனின் ஒளி பொருந்திய
முகத்தின் வழியாகப் பேரின்பம் தோன்ற, மண்ணுலகோடு வானவர்
வாழும் வானுலகமுமாகிய இடங்களெல்லாம் அப்பேரின்பத்தால்
நிறைந்தன.

     நீழல் - நிழல் என்பதன் நீட்டல் விகாரம்.
 
                      130
வேத ணிந்தன பாலன் வீயணி வாகை யான்றனை வீக்கலாற்
போத ணிந்தன கோடு சூழ்படர் பூத்த பொற்கொடி போலுமே
மீத ணிந்தன நீவி போர்த்தவிர் மேனி யைத்தவன் வீக்கலுஞ்
சீத ணிந்தன மேக மொண்சுடர் செவ்வி மூடிய போலுமே.
 
வேது அணிந்தன பாலன் வீ அணி வாகையான்தனை வீக்கலால்,
போது அணிந்தன கோடு சூழ் படர் பூத்த பொற்கொடி போலுமே.
மீது அணிந்தன நீவி போர்த்து, அவிர் மேனியைத் தவன் வீக்கலும்,
சீது அணிந்தன மேகம் ஒண் சுடர் செவ்வி மூடிய போலுமே.

     அப்பொழுது, வேத உருவங்கொண்டு பிறந்த அப்பாலன் மலர்
நிறைந்த கொடியைக் கொண்டுள்ள சூசையைக் கட்டித் தழுவுதலால், மலர்
நிறைந்த கிளையைச் சுற்றிப் படர்ந்து பூத்த பொற்கொடிபோல் தோன்றுவான்.
தன் மீது அணிந்த ஆடையால் மூடி, அப்பாலனின் ஒளி பொருந்திய
மேனியைத் தவத்தோனாகிய சூசை கட்டித் தழுவிய விதமோ, குளிர்ச்சி
கொண்ட மேகம் ஆதவனைச் செவ்வையாக மூடியதுபோல் தோன்றும்.