பக்கம் எண் :

முதற் காண்டம்620

     வேது, சீது, 'வேதம்' 'சீதம்' என்ற சொற்கள் கடைக் குறையாய்
நின்றன.

                    131
தத்தெ ரிந்தன மீன்கள் சூடிய தன்ம நாயகி தன்முகத்
தொத்தெ ரிந்தன கண்க ளிப்பெழ வுற்று நோக்கிய நோக்கறா
மொய்த்தெ ரிந்தன சேய்முகத்தொளி முற்று முண்டனள்
                                         செஞ்சுடர்
துய்த்தெ ரிந்தன திங்க டேறிய தோற்ற மொத்ததி லங்கினாள்.
 
தத்து எரிந்தன மீன்கள் சூடிய தன்ம நாயகி, தன்முகத்து
ஒத்து எரிந்தன கண் களிப்பு எழ உற்று நோக்கிய நோக்கு அறா,
மொய்த்து எரிந்தன சேய்முகத்து ஒளி முற்றும் உண்டனள்,                                           செஞ்சுடர்
துய்த்து எரிந்தன திங்கள் தேறிய தோற்றம் ஒத்தது இலங்கினாள்.

     மின்னி விளங்கிய விண்மீன்களை முடியாகச் சூடிய புண்ணியத்
தலைவியாகிய மரியாள், தன் முகத்தில் அவ்விண்மீன்களை ஒத்து விளங்கிய
கண்கள் களிப்பு மேலோங்கக் குழந்தை நாதனைக் கூர்ந்து நோக்கிய
பார்வையை அகற்ற இயலாமல், திரண்டு விளங்கிய தன் மகனின் முகத்து
ஒளியை முற்றும் பருகியவளாய், கதிரவனின் ஒளியை உண்டு விளங்கிய
மதியின் தெளிந்த தோற்றத்தை ஒத்து விளங்கினாள்.

     தத்தி, ஒத்து என்ற வினையெச்சங்கள், முறையே, தத்து, ஒத்தது என
என்றன, எரிந்தன - எரிந்த : இடையே 'அன்' சாரியை.
 
                   132
மீன்வ ரம்பென மின்னு நீண்விழி மீண்டி மைப்பில
                                    காண்வளன்
வான்வ ரம்பென லாக வோவிய மான நின்றன ளென்றொரீஇத்
தேன்வ ரம்பென வின்பு தேறிய வாவி யாயின சேயனைக்
கான்வ ரம்பென விண்ட தாயது கஞ்ச வங்கையி லீந்தனன்.