பக்கம் எண் :

முதற் காண்டம்621

மீன் வரம்பு என மின்னு நீண் விழி மீண்டு இமைப்பு இல
                                   காண் வளன்,
வான் வரம்பு என வாம ஓவியம் மான நின்றனள் என்று,
                                   ஒரீஇ,
தேன் வரம்பு என இன்பு தேறிய ஆவி ஆயின சேயனை,
தான் வரம்பு என விண்ட தாயது கஞ்ச அம் கையில்
                                   ஈந்தனன்.

     விண்மீன்களின் அழகுக்கு வரம்பு கட்டியதுபோல் ஒளிரும் மரியாளின்
நீண்ட கண்கள் பார்வை மீளலும் இமை கொட்டுதலும் இல்லாமை கண்ட
சூசை, வானுலக அழகிற்கு வரம்பாகவும் அழகிய சித்திரம் போலவும் அவள்
நின்றாளென்று கண்டு, இடம் பெயர்ந்து, தேனின் இனிமைக்கு வரம்பு
கட்டியது போன்ற இன்பத்தைத் தெளியத் தந்து தனக்கு உயிராக விளங்கிய
அம்மகனை, நறுமணத்துக்கு வரம்பாக விரிந்து நின்ற அத்தாயின் தாமரை
மலர் போன்ற அழகிய கையில் திருப்பித் தந்தான்.

                   133
காம்பி லங்கிளர் கால்பெ யர்ந்தன காலை யங்கலர்
                                    பேர்ந்ததோ
ராம்பி லங்கிளர் பூவி ருஞ்சினை யாக நின்றன மாதவன்
சாம்பி யங்கிளர் தாடு ணர்த்துணை தார தென்றணி யோகையா
லோம்பி யங்கிளர் வாகை யொண்குடை யூச நன்னிழ னீடினான்.
 
காம்பு இல் அம் கிளர் கால் பெயர்ந்தன காலை, அங்கு அலர்
                                          பேர்ந்தது ஓர்
ஆம்பிலம் கிளர் பூ இருஞ் சினையாக நின்றன மாதவன்
சாம்பி, அம் கிளர் தாள் துணர்த் துணை தார் அது என்று அணி
                                          ஓகையால்
ஓம்பி, அம் கிளர் வாகை ஒண் குடை ஊச நல் நிழல் நீடினான்.

     கெடுதல் இல்லாத அழகு மிகுந்த திருமகன் தன்னைவிட்டு மரியாள்
கைக்கு மாறியபோது, தேன் நிறைந்த பூக்களைக் கொண்டிருந்த ஒரு பெரிய
கிளை தன் மலர்கள் தன்னை விட்டு நீங்கப் பெற்ற சாயலில் அங்கு நின்று
கொண்டிருந்த பெருந் தவத்தோனாகிய சூசை வாடி, அத்திருமகனின் அழகு
விளங்கும் மலர் போன்ற இரு கால்களையும் மாலை என்று தன் தலைமீது