பக்கம் எண் :

முதற் காண்டம்622

தாங்கி நின்ற உவகையோடு பேணி, அழகு விளங்கும் தன் மலர்க்
கொடியாகிய குடை மேலே அசைந்தாட, நல்ல நிழலை நெடு நேரம்
தந்து நின்றான்.

     'தார் அது' என்ற விடத்து 'அது' சாரியை.
 
                      134
ஊச லம்புலி யுற்ற தொத்தென வொள்ளி ரண்டுவெண்
                                        சாமரை
காச லம்பிய மேனி காட்டிய காதல் வானவர் வீசவே
பாச லம்புரி பாழி பற்றிய பள்ளி பண்பொடு வீங்கினா
னாச லம்புரி யாசை யானிறை யாகு லக்கட றூர்த்தனன்.
 
ஊசல் அம்புலி உற்றது ஒத்தென, ஒள் இரண்டு வெண்சாமரை,
காசு அலம்பிய மேனி காட்டிய காதல் வானவர் வீசவே,
பாசு அலம் புரி பாழி, பற்றிய பள்ளி பண்பொடு வீங்கினான்,
ஆசலம் புரி ஆசையால் நிறை ஆகுலக் கடல் தூர்த்தனன்.

     மணி வடங்கள் ஒலிக்க நின்ற மேனியோடு தோன்றிய அன்பு கொண்ட
வானவர் இருவர், விண்மதி இரண்டு ஊசலாடி வந்தடைந்ததற்கு ஒப்பாக,
ஒளி பொருந்திய இரண்டு வெண் சாமரை கொண்டு வீசி நிற்க, பாவம்
செய்வதற்குக் காரணமான ஆசையால் வந்து நிறையும் துயரக் கடலை மூடி
மறைக்க வந்துற்ற ஆண்டவன், மூங்கில் அசைந்தாடும் குகையில், தன் தாய்
பற்றித் தாங்கிய கையாகிய படுக்கையில், தான் எடுத்துக் கொண்ட எளிமைக்
கோலத்திற்கு ஏற்ற பண்போடு பெருமையாகத் துயில் கொண்டான்.

     மூன்றாவது அடிக்கு, "பச்சை மாலையாற் செய்யப்பட்ட படுக்கையைப்
பற்றி வந்த நித்திரையை இனிதாய்க் கொண்டான்" எனப் பழைய
உரையாசிரியரும் வித்துவான் ஜெகராவு முதலியாரும் ஒப்பி மொழிந்த உரை
பொருந்தவதாய் இல்லை. அடுத்த பாடலில், "கன்னி கரத்தில் துஞ்சிய கால் ...
தவத்தோன் ... பாடிப் படர் நற் புகழுற்றான்" என வருவதும் காண்க.