பக்கம் எண் :

முதற் காண்டம்624

"இருளே அணுகா மறைவு அணுகா இரவிக்கு ஒளி ஆம்
                              திரு விழியை
மருளே அணுகா மூடுகின்றான்; வானும் மண்ணும் வழுவாது
                              ஆன்
அருளே மருளா, இவ் உலகிற்கு அயர்வு மாற, அயர்வு
                              இல்லான்,
தெருளே மருளா, மனம் துயிலா, திளை நான் களிப்பத்
                              துயில்கின்றான்.

     "இருள் அணுகாமலும் மறைவு அணுகாமலும் பகலவனுக்கே ஒளியாய்
விளங்கும் தன் திருக் கண்களை இக்குழந்தைநாதன் மயக்கம் அணுகாத
விதமாய் மூடிக்கொள்கின்றான்; சோர்வு என ஒன்றும் தனக்கு இல்லாதவன்,
வானுலகையும் மண்ணுலகையும் தவறில்லாமல் ஆளும் தன் அருள்
மயங்காமலும், இவ்வுலகிற்கு ஏற்பட்டுள்ள சோர்வு நீங்குமாறும், தன் அறிவுத்
தெளிவு மயங்காமலும், மனம் துயிலாமலும், அன்பில் திளைத்த நான்
களிப்புறுமாறு தான் தூங்குகின்றான்.
 
                     137
களித்த நாளி லரும்புந்தென் காலே யினிதீங் கரும்புதியே
துளித்த நானத் தேனரும்பத் துணர்நாண் மலர்கா
                                    ளரும்புதிரே
விளித்த நாகு மாங்குயில்காள் விளைதேன் பாவை
                                    யரும்புதிரே
யளித்த நாத னான்கனிய வன்பு துயிலா துயில்கின்றான்.
 
"களித்த நாளில் அரும்பும் தென்காலே, இனிது ஈங்கு
                                      அரும்புதியே!
துளித்த நானத் தேன் அரும்ப, துணர் நாள் மலர்காள்,
                                      அரும்புதிரே!
விளித்த நாகு மாங்குயில்காள், விளை தேன் பாவை
                                      அரும்புதிரே!
அளித்த நாதன் நான் கனிய, அன்பு துயிலா, துயில்கின்றான்.

     "மானிடரை மீட்டுக் காக்க அவதரித்து வந்த ஆண்டவன், நான்
மகிழவும், தன் அன்பு தூங்காமலும், தான் கண் துயில்கின்றான்; எனவே,
மகிழ்ச்சியுற்ற நாளில் வந்து தோன்றும் தென்றற் காற்றே, இனிதாக இங்கு
வந்து வீசுவாயாக! இன்று அலரும் பருவத்துக் கொத்தான மலர்களே,
துளியாகக் கொண்ட மணமுள்ள தேன் துளிக்குமாறு மலருங்கள்!