"கோ வீற்றிருந்து
மகிழ்வோய் நீ; குலையா வயத்து ஒப்பு
இகழ்ந்தோய் நீ;
நா வீற்றிருந்த புகழ்மிக்க நணுகாக் காட்சிக்கு இறையோய்
நீ;
பூ வீற்றிருந்து நாம் வாழப் பூ வந்து, இடர் உற்று,
அழுவோய் நீ;
ஆ வீற்றிராயோ என் இதயத்து! அதற்கே உறுதி புரியாயோ! |
"வானுலகில்
வீற்றிருந்து மகிழ்பவனும் நீயே; குலையாத வல்லமையில்
ஒப்புமையெல்லாம் கடந்து நிற்பவனும் நீயே; புலவர் நாவில் வீற்றிருந்த
மிக்க புகழுரைக்கும் எட்டாத அறிவுக்கெல்லாம் தலைவனும் நீயே; பூவுலகில்
நாங்கல் நலத்தோடு வீற்றிருந்து வாழும்படியாக இப்பூவுலகில் மனிதனாய்
வந்து, எங்களுக்காகத் துன்பங்களை அனுபவித்து அழுபவனும் நீயே; ஆ!
என் இதயத்தில் நீ வீற்றிருக்க மாட்டாயோ! அதற்கான உறுதிப்பாட்டைத்
தர மாட்டாயோ!
141 |
நூல்வாய்ப்
புகழ்மே லுயர்ந்தோய் நீ நோய்வாய் மருந்திற்
கனிவோய்நீ
கோல்வாய்க் கோடா நீதிநெறி கொண்டெவ் வுலகும்
புரந்தோய்நீ
வேல்வாய்க் குருதி பாய்ந்திறப்ப மெய்கொண் டாயோ
விதையறியா
கால்வா யிலைபோற் றியங்கியவென் கருத்திற் குணர்வை
யுணர்த்தாயோ. |
|
"நூல் வாய்ப்
புகழ் மேல் உயர்ந்தோய் நீ; நோய் வாய்
மருந்தின் கனிவோய் நீ;
கோல் வாய்க் கோடா நீதி நெறி கொண்டு எவ் உலகும்
புரந்தோய் நீ;
வேல் வாய்க் குருதி பாய்ந்து இறப்ப மெய் கொண்டாயோ?
இதை அறியா,
கால் வாய் இலை போல் தியங்கிய என் கருத்திற்கு உணர்வை
உணர்த்தாயோ? |
|