4 |
நவ்வியங்
கதிர்கொள் சூட்சி நாயகன் முதல்வா
னோருஞ்
செவ்விய மதுரச் சொல்லாற் சீரிய காட்சி யோரு
மவ்விய மகன்று தேறு மருந்தவத் தோருஞ் செய்த
குவ்விய புகழ்பின் னுண்டோ கூறவு மூகை யானே |
|
நவ்வியம்
கதிர் கொள் சூட்சி நாயகன் முதல், வானோரும்,
செவ்விய மதுரச் சொல்லால் சீரிய காட்சியோரும்,
அவ்வியம் அகன்று தேறும் அருந் தவத்தோரும் செய்த
குவ்விய புகழ் பின், உண்டோ கூறவும் மூகை யானே? |
ஒளி கொண்ட
தெளிந்த உணர்வு படைத்த ஆண்டவன் முதல்,
வானோர்களும், செவ்வையான இனிய சொற்களால் சிறந்த அறிவுடையோரும்,
மனக்கோட்டம் இல்லாது தெளிந்து தேறும் அரிய தவ முனிவர்களும்
இந்நகருக்கு உரிமை செய்த திரண்ட புகழுக்குப் பின், ஊமை போன்ற
நான் கூறவேண்டுவது ஒன்று உண்டோ?
5 |
தேனக
வினிய வன்பார் திருவினோ னருளிற் சிந்தும்
மீனக விருளைச் சீய்க்கி வெயிற்குழா முயிர்த்த செந்நீர்
தானக முடியாய்ச் சூடித் தமனிய நகரம் பூண்ட
வானக நகவொண் மாட்சி வகுத்துரைப் பரிய வாறே. |
|
தேன்
அக இனிய அன்பு ஆர் திருவினோன் அருளின்
சிந்தும்
மீன் நக இருளைச் சீய்க்கி வெயில் குழாம் உயிர்த்த செந்நீர்
தான் நக முடியாய்ச் சூடு இத் தமனிய நகரம் பூண்ட
வானகம் நக ஒள் மாட்சி வகுத்து உரைப்பு அரிய ஆறே. |
தன் உள்ளத்தில்
தேனினும் இனிய அன்பு நிறைந்த செல்வனாகிய
ஆண்டவன் நம்மீது அருள் கொண்டு சிந்தியதும், விண் மீனினும் மிகுதியாக
இருளை ஒழித்து ஒளிப் பிழம்பை வெளியிடுவதுமாகிய திரு இரத்தத்தைத்தான்
விளங்குமாறு முடியாய்ச் சூடியுள்ள இப்பொன்னகரம் பூண்டுள்ள, வானுலகமும்
மகிழத் தக்க ஒளி பொருந்திய மாண்பை வகுத்துரைப்பது அரிய செயலே
ஆகும்.
|