பக்கம் எண் :

முதற் காண்டம்64

                       6
பயனினான் மறைநூ லொக்கும் பகலினை மணியா லொக்கும்
வியனினா லுலக மொக்கும் வேலியாற் கன்னி யொக்கும்
முயலினா வலையை யொக்கு முனிமுனி யொன்னார்க் கொக்கும்
நயனினா லுயர்வீ டொக்கு நகரினை யொக்கும் வீடே
 
பயனினால் மறை நூல் ஒக்கும்; பகலினை மணியால் ஒக்கும்;
வியனினால் உலகம் ஒக்கும்; வேலியால் கன்னி ஒக்கும்;
முயலினால் அலையை ஒக்கும்; முனி முனி ஒன்னார்க்கு ஒக்கும்;
நயனினால் உயர் வீடு ஒக்கும். நகரினை ஒக்கும் வீடே.

     இந்நகரம் யாவர்க்கும் பயன் தருதலால் வேத நூலை ஒக்கும்;
தன்னிடமுள்ள மணிகளின் ஒளியால் பகலை ஒக்கும்; தன் பரப்பினால்
உலகத்தை ஒக்கும்; காவல் மதிலால் கன்னிப் பெண்ணை ஒக்கும்;
இடைவிடாத முயற்சியினால் அலையுள்ள கடலை ஒக்கும்; தன் பகைவர்க்கு
அழிவு பயக்கும் முனிவர்தம் சீற்றத்தை ஒக்கும்; தன்னிடமுள்ள
நன்மைகளால் உயர்ந்த வான் வீட்டை ஒக்கும். அவ்வான் வீடு ஒன்றே
இந்நகரை ஒக்கும்.

     முனி முனி-முனி முனிவு: ''குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு,
நின்றன்னார் மாய்வர் நிலத்து,'' என்ற குறள் (898) நினைக்கத்தக்கது.
 
                        7
பொற்றங்கு முலகந் தன்னைப் பொங்கிருங் கடல்சூழ்ந்
     
                                    தென்ன
விற்றங்கு மிரவி காலும் வெயிற்பிழம் பனைய நாறிச்
செற்றங்கு மலையி னோங்கிச் சேணுறு மதிளைச் சூழ்ந்த
வெற்றங்கு மலையை மாறி யிகன்றக லகழித் தோற்றம்
 
பொன் தங்கும் உலகந் தன்னைப் பொங்கு இருங்கடல் சூழ்ந்து
                                              என்ன,
வில் தங்கும் இரவி காலும் வெயில் பிழம்பு அனைய நாறி,
செல் தங்கும் மலையின் ஓங்கி, சேண் உறும் மதிளைச் சூழ்ந்த,
எல் தங்கும் அலையை மாறி இகன்று அகல் அகழித் தோற்றம்.

     ஒளி பொருந்திய ஞாயிறு உமிழும் வெயிலின் திரளைப் போன்று
தோன்றி, மேகம் தங்கும் மலையைப் போல் உயர்ந்து, வானத்தை