எட்டுவது அந்நகரத்து
மதில். அதனைச் சூழ்ந்து, ஒளி பொருந்திய
அலையை வீசிக் கரையோடு மோதிப் பரந்து கிடப்பது அகழி. அவ்வகழியின்
தோற்றம் பொன்னாலாகிய உலகத்தை அலை பொங்கும் பெருங்கடல் சூழ்ந்து
கிடப்பது போல் உள்ளது.
'உள்ளது' என
ஒரு சொல் வருவித்து முடிக்கப்பட்டது. மதிள் -'மதில்'
என்பதன் கடைப்போலி.
8 |
பூவுல
கியல்பன் றம்பொற் பொலிமணி நகரம் பொன்னார்
தேவுல குரித்தென் றங்கட் டெளிந்துபுக் கிடுமென் றாழி
தாவுல கிருத்த வெள்ளித் தாடளை யிட்ட தேபோற்
கோவுல விஞ்சி சூழ்ந்த குவளைநீ ளகழித் தோற்றம். |
|
பூவுலகு
இயல்பு அன்று, அம்பொன் பொலி மணி நகரம்,
பொன்
ஆர்
தே உலகு உரித்து என்று, அங்கண் தெளிந்து புக்கிடும் என்று,
ஆழி
தாவு உலகு இருத்த, வெள்ளித் தாள் தளை இட்டதே போல்,
கோ உலவு இஞ்சி சூழ்ந்த குவளை நீள் அகழித் தோற்றம் |
அழகிய பொன்
போல் விளங்கும் மணி நிறைந்த இந்நகரம்,
இப்பூவுலகு தன் தகுதிக்கு ஏற்றதன்று எனவும், பொன் நிறைந்த
தேவலோகமே தனக்கு உரியது எனவும் தெளிந்து, அங்கே புகுந்துவிடும்
என்று கருதி, கடல் சூழ்ந்த இவ்வுலகத்திலேயே அதனை இருத்திக்
கொள்ளும் பொருட்டு அதன் கால்களுக்கு வெள்ளி விலங்கு மாட்டியது
போல், வானத்தளவு உயர்ந்துதோயும் மதிலைச் சூழ்ந்த குவளை மலர்
நிறைந்துள்ள அகழியின் தோற்றம் உள்ளது.
9 |
சீரியார்
நட்பு வேர்கொள் சீரென நிலத்திற் றாழ்ந்து
பூரியார் நட்பு போலப் புணர்ந்தசை வலமே லாடி
நாரியா ரழகு காண நாணிய கமல மிங்கண்
வேரியா ரிதழைப் பூத்து வெறியெறி யகழித் தோற்றம். |
|