பக்கம் எண் :

முதற் காண்டம்66

சீரியார் நட்பு வேர் கொள் சீர் என நிலத்தில் தாழ்ந்து,
பூரியார் நட்பு போலப் புணர்ந்த சைவலம் மேல் ஆடி,
நாரியார் அழகு காண நாணிய கமலம் இங்கண்
வேரி ஆர் இதழைப் பூத்து வெறி எறி அகழித் தோற்றம்.

     நகரிலுள்ள மகளிர் தம் அழகைக் கண்டு நாணமுற்ற தாமரை இங்கே
வந்து, தேன் உள்ளே நிறைந்துள்ள இதழ்களை விரித்து வாசனை வீசும்
அகழியின் தோற்றம், உயர்ந்தோர் நட்பு ஆழமாய் வேர் கொள்ளும் தன்மை
போல நிலத்தினுள் ஆழமாகத் தாழ்ந்ததாயும், இழிந்தோர் நட்புபோலத்
தன்னோடு சேர்ந்திருந்த பாசி நீருக்கு மேலே அசைந்தாடுவதாயும்
அமைந்திருந்தது.

     'அமைந்திருந்தது' என்ற முடிக்குஞ் சொல் வருவிக்கப்பட்டது. பிற
பாடல்களிலும் இவ்வாறு கொள்க. ''நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை,
நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள்ளாதே,'' எனவும், ''ஒரு நாட் பழகினும்
பெரியோர் கேண்மை இரு நிலம் பிளக்க வேர் வீழ்க் கும்மே'', எனவும்
வரும் வெற்றி வேற்கை (33-34) அடிகளை ஒப்பு நோக்குக.
 
                       10
ஈரும்வா ளெயிற்றின் கூன்வெண் ணிளம் பிறை தோன்ற
                                       வூனைச்
சோரும் வாய் விரித்துக் கட்டீச் சொரிதர வகழி தாழ்ந்து
பேரும் வா யுருக் கொண் டன்று பேய்க்குலம் வெருவுய்த்
                                       தெய்தி
யூரும்வா யென்ன வங்கண் ணுழக்கிய விடங்க ரீட்டம்.
 
ஈரும் வாள் எயிற்றின் கூன் வெண் இளம் பிறை தோன்ற, ஊனைச்
சோரும் வாய் விரித்து, கண் தீச் சொரிதர, அகழி தாழ்ந்து
பேரும் வாய் உருக்கொண்டு, அன்று பேய்க்குலம் வெரு உய்த்து
                                               எய்தி
ஊரும் வாய் என்ன, அங்கண் உழக்கிய இடங்கர் ஈட்டம்.

     அகழியை ஆழப்படுத்தி மண்ணைப் பெயர்த்தெடுத்தபோது
இவ்வுருவத்தை எடுத்துக்கொண்டு, அன்று முதல் பேய்க்கூட்டம் வந்தடைந்து
காண்பவருக்கு அச்சம் வருவித்து ஊர்ந்துகொண்டிருக்கும் இடம் இது என்று
சொல்லத் தக்க வகையில், கூனலுள்ள இளம் பிறையே தமக்கு அறுக்கும்