பக்கம் எண் :

முதற் காண்டம்630

"ஒளி நாக்கொடு வான் சுடர் புகழ, ஒளி நாக்கொடு பல்
                                மணி புகழ,
களி நாக்கொடு பல் புள் புகழ, கமழ் நாக்கொடு காமலர்
                                புகழ,
தளி நாக்கொடு நீர்ப் புனல் புகழ, தினமே புகழப்படுவோய்
நீ அளி நாக்கொடு நான் உனைப் புகழ அறியா மூகை;
                                உணர்த்தாயோ?

     "வானில் உலாவும் சுடர்கள் தம் கதிரொளியாகிய நாவைக் கொண்டு
புகழவும், பல வகை மணிகள் தம் ஒளியாகிய நாவைக் கொண்டு புகழவும்,
பலவகைப் பறவைகள் தம் மகிழ்ச்சி பொருந்திய நாவைக் கொண்டு
புகழவும், சோலையிலுள்ள மலர்கள் தம் மணமாகிய நாவைக் கொண்டு
புகழவும், ஆற்று வெள்ளம் தன் தெளிவென்னும் நாவைக் கொண்டு
புகழுவுமாக, எந்நாளும் புகழப்படுபவன் நீ; நானோ அன்பு என்னும்
நாவைக் கொண்டு உன்னைப் புகழ அறியாத ஊமை; உன்னைப் புகழும்
விதத்தை எனக்கு உணர்த்த மாட்டாயோ?
 
                        145
என்றும் போற்றப் படுவோய்நீ யெங்கு நிழற்றோர் குடையோய்நீ
முன்றுன் பொழுதற் றுளனோய்நீ முக்கா லத்தோர்
                                    பொழுதோய்நீ
குன்றுந் தன்மைத் துரைபின்றக் குணியா வருள்செய் தாயதற்கே
யான்றுந் தேறா வென்னிதயத் துணர்வின் காட்சி அளியாயோ.
 
"என்றும் போற்றப்படுவோய் நீ; எங்கும் நிழற்று ஓர் குடையோய் நீ;
முன் துன் பொழுது அற்று உளனோய் நீ; முக்காலத்து ஓர்
                                    பொழுதோய் நீ;
ன்றும் தன்மைத்து உரை பின்ற, குணியா அருள் செய்தாய்; அதற்கே
ஒன்றும் தேறா என் இதயத்து உணர்வின் காட்சி அளியாயோ?"

     "எக்காலமும் போற்றப்படுபவனும் நீயே; எவ்விடத்தும் நிழல் தந்து
காக்கும் ஒரே வெண் கொற்றக் குடையை உடையவனும் நீயே; உனக்கு
முற்படப் பொருந்திய காலம் என்று ஒன்றும் இல்லாமல் என்றும்