பக்கம் எண் :

முதற் காண்டம்631

உள்ளவனும் நீயே; மூன்று காலங்களையும் ஒரே காலமாய்க்
கொண்டுள்ளவனும் நீயே; குறைபடும் இயல்புள்ள சொல்லெல்லாம்
பிற்படுமாறு, கருதற்கரிய அருளை எனக்கு நீ செய்தாய்; அதற்கு ஏற்ற
கைம்மாறு ஒன்றும் தெளிந்து தேற இயலாத என் இதயத்திற்கு அறிவின்
காட்சியைத் தந்து உதவ மாட்டாயோ?"

     'குணியா அருள்' என்றது, ஆண்டவனுக்கு வளர்ப்புத் தந்தையாய்
அமைந்த பேறு எனக் கொள்க.
 
                       146
என்றா னழுதா னுள்ளுருகி யின்பக் கடலாழ்ந் தன்றாழ்ந்தான்
ன்றா விறையோன் றயைக்கடலுட் குளித்தா னீந்திக்
                                    கரைகாணான்
சென்றா னென்ன மெய்மறந்தே சிறிதோர் கானின்
                                    றுணர்ந்தவைவா
னின்றார் கண்டுள் ளதிசயிப்ப நிகரில் லன்பான்
                                    மீண்டுரைப்பான்.
 
என்றான் அழுதான் உள் உருகி; இன்பக் கடல் ஆழ்ந்து அன்று
                                      ஆழ்ந்தான்;
ன்றா இறையோன் தயைக் கடலுள் குளித்தான்; நீந்திக் கரை
                                      காணான்;
சென்றான் என்ன மெய் மறந்தே, சிறிது ஓர் கால் நின்று
                                      உணர்ந்தவை,
வான் நின்றார் கண்டு உள் அதிசயிப்ப, நிகர் இல் அன்பால்
                                      மீண்டு உரைப்பான்:

     என்று இவ்வாறெல்லாம் சூசை சொல்லி மனம் உருகி அழுதான்;
அப்பொழுது இன்பக் கடலுள் ஆழமாக மூழ்கினான்; எக்குறையும் இல்லாத
ஆண்டவனின் தயவு என்னும் கடலுள் இறங்கிக் குளித்தான்; அதனை நீந்திக்
கரை காண இயலாதவன் ஆனான்; பின் கரைக்குச் சென்றவன்போல் மெய்
மறந்து, ஒரு சிறிது நேரம் நின்று தன் உள்ளத்தில் உணர்ந்தவற்றை, வானவர்
கண்டு தம் உள்ளத்தில் வியப்புற, ஒப்பற்ற அன்பால் மீண்டும் பின்வருமாறு
சொல்வான்: