பக்கம் எண் :

முதற் காண்டம்632

                       147
அறந்தாய் தந்தை சுற்றமுமற் றனைத்து நீயே கதிநீயே
பிறந்தா யுலகிற் குயிரன்னோய் பிறந்தெந் துயரு மெம்பகையுந்
துறந்தா யெங்கள் சிறைதீர்த்தாய் துகள்பூட் டியவீட்
                                      டுயர்வாயில்
திறந்தா யிவையா வருமறியத் திறன்செய் தருள்செய்
                                      திரங்காயோ.
 
"அறம் தாய் தந்தை சுற்றமும் மற்று அனைத்தும் நீயே; கதி நீயே,
பிறந்தாய், உலகிற்கு உயிர் அன்னோய்; பிறந்து, எம் துயரும் எம்
                                           பகையும்
துறந்தாய்; எங்கள் சிறை தீர்த்தாய்; துகள் பூட்டிய வீட்டு உயர்
                                           வாயில்
திறந்தாய். இவை யாவரும் அறியத் திறன் செய்து, அருள் செய்து,
                                           இரங்காயோ?

     "எங்களுக்கு அறமும் தாயும் தந்தையும் சுற்றமும் மற்றுள்ள யாவும்
நீயே; எங்கள் இறுதிக் கதியும் நீயே. உலகிற்கு உயிர் போன்றவனே, நீ
மனிதனாகப் பிறந்தாய்; பிறந்து எங்கள் துயரங்களையும் பகைகளையும்
நீக்கினாய்; எங்கள் பாவச் சிறையைத் தீர்த்து வைத்தாய்; பாவம் பூட்டி
வைத்த வான் வீட்டின் உயர்ந்த வாயிலைத் திறந்து வைத்தாய். இவற்றை
எல்லோரும் அறிந்து பயனடையுமாறு, உனது வல்லமையைக் காட்டியும்
அருளைக் கூட்டியும் இரக்கம் செய்ய மாட்டாயோ?
 
                      148
குருவாய் வந்தோ யொளிப்பாயோ கோதா ரிருடீர் வெஞ்சுடரி
னுருவாய் வந்தோ யொளியாயோ வுயர்வா னிகரே மண்கனியக்
கருவாய் வந்தோ யிக்கருணை கண்கொண் டெவருங்
                                      களித்தறியத்
தருவாய் வந்தோ யிலவன்பின் றகவோய் திருவோ யென
                                      த்தொழுதான்.
 
"குருவாய் வந்தோய், ஒளிப்பாயோ? கோதுஆர் இருள் தீர்
                                         வெஞ்சுடரின்
உருவாய் வந்தோய், ஒளியாயோ? உயர் வான் நிகரே மண் கனியக்
கருவாய் வந்தோய், இக் கருணை கண் கொண்டு எவரும் களித்து
                                         அறியத்
தருவாய், வந்து; ஓய் இல அன்பின் தகவோய், திருவோய்!" எனத்
                                         தொழுதான்.