இடையரும் மூவரசரும்
திருக் குழந்தையை நேரிற் கண்டு வணங்கிய
செய்தி கூறும் பகுதி.
இடையர்
வந்து குழந்தையை வணங்கல்
- மா, தேமா,
தேமா, தேமா, - மா, தேமா, கூவிளம்
1 |
இன்ன வாயி
லின்ன தன்மை யின்ன யாவு மாகையிற்
பொன்ன நாடு துன்னு மும்பர் பொன்னு ருக்கொ
டாங்குபோய்
மின்ன னேரு மன்னை யீன்ற வேத நாத னைத்தொழ
வுன்ன லாத கோவ ரின்ப முண்ண வுற்ற ழைத்தனர். |
|
இன்ன வாயில்
இன்ன தன்மை இன்ன யாவும் ஆகையில்,
பொன்ன நாடு துன்னும் உம்பர் பொன் உருக் கொடு ஆங்கு போய்,
மின்னல் நேரும் அன்னை ஈன்ற வேத நாதனைத் தொழ,
உன் அலாத கோவர் இன்பம் உண்ண, உற்று, அழைத்தனர். |
குகையாகிய இவ்விடத்தில்
இவ்விதமாய் இவையெல்லாம்
நிகழ்கையில், பொன்னுலகில் வாழும் வானவர் பொன் மயமான உருவம்
கொண்டு அவ்விடம் போய்ச் சேர்ந்து, இடையர் நினைத்தற்கரிய இன்பம்
கொள்ளுமாறு, மின்னல் போன்ற கன்னித் தாய் பெற்ற வேத நாதனாகிய
குழந்தையைத் தொழ அழைத்தனர்.
'பொன்னாடு'
என்பது 'பொன்ன நாடு' என விரிந்து நின்றது.
|