பக்கம் எண் :

முதற் காண்டம்636

                       2
கொழுந்து றுங்கு ளிர்ந்த முல்லை கொண்ட கோவர் கூட்டமு
மெழுந்து றுங்கு டத்தி யாரு மேகி யாய காட்சியால்
விழுந்து றுங்க ளிப்பு விஞ்சி வேத நாதன் மேற்பகந்
தொழுந்தொ றுந்தொ ழுந்தொ றுந்து ளங்கு கின்ற தோற்றமே.
 
கொழுந்து உறும் குளிர்ந்த முல்லை கொண்ட கோவர் கூட்டமும்,
எழுந்து உறும் குடத்தியாரும் ஏகி, ஆய காட்சியால்,
விழுந்து, உறும் களிப்பு விஞ்சி, வேத நாதன் மேல் பதம்
தொழுந் தொறும் தொழுந் தொறும் துளங்குகின்ற தோற்றமே.

     தளிர் கொள்ளும் குளிர்ந்த முல்லை நிலத்தைக் குடியிருப்பாகக்
கொண்ட இடையர் கூட்டமும், அவர்களோடு எழுந்து வரும்
இடைச்சியருமாகச் சேர்ந்து போய், அங்கே கண்ட காட்சியால் ஆகும்
மகிழ்ச்சி மேலோங்கி, வேத நாதனாகிய அக் குழந்தையின் கால்மீது
விழுந்து தொழுந்தோறும் தொழுந்தோறும், விளங்குகின்ற தோற்றம்
காண்டனர்.

     'கொண்டனர்' என்ற சொல் வருவித்து முடிக்கப் பெற்றது. காடும்
காடு சார்ந்த இடமுமாகிய முல்லை நிலம், அவ்விடத்துச் சிறந்த இயற்கைப்
பொருளாகிய முல்லையால் அப்பெயர் பெற்றது.
 
                   3
மாலை மேவு வேங்கை பற்றி வண்டு ணாதெ னமன
மாலை மேவு வேங்கை பற்றி வண்டு ணாதெ னமன
மாலை யாக வீங்கு வந்து வாச மாரு முல்லையார்
மாலை யாக வீங்கு வந்து வாச மாரு முல்லையார்.
 
மாலை மேவு வேங்கை பற்றி வண்டு உணாது என, மன
மாலை மேவு வேங்கை பற்றி வண்டு உணாது என மன
மாலை ஆக, வீங்கு உவந்து, வாசம் ஆரும் முல்லை ஆர்
மாலை ஆக ஈங்கு வந்து, வாசம் ஆரும் முல்லையார்.