7 |
மணிக்க
லத்த கத்த மைத்த வான மிர்த மார்பினோய்
பிணிக்கு லத்த கத்து தித்த பெற்றி யாய்ந்து வாழ்த்திடப்
பணிக்கு லத்த கத்த டங்கி லாற்ப ணித்த நின்பணி
யணிக்கு லத்த கத்த ணிந்த வன்பு பேர்கி லாகுமே. |
|
"மணிக் கலத்து
அகத்து அமைத்த வான் அமிர்த
மார்பினோய்,
பிணிக் குலத்து அகத்து உதித்த பெற்றி ஆய்ந்து வாழ்த்திடப்
பணிக் குலத்து அகத்து அடங்கு இலால், பணித்த நின்
பணி அணிக் குலத்து அகத்து அணிந்த அன்பு பேர்கு இல்
ஆகுமே. |
"மாணிக்கக்
கலத்தில் இட்டு வைத்த வானுலக அமிழ்தம் போன்ற
மார்பு உடையவனே, நோய்கொண்ட மனித குலத்தில் நீ வந்து பிறந்த
தன்மையை ஆராய்ந்து வாழ்த்துதல் என்பது சொற்களின் கூட்டத்துள்
அடங்காமையால், ஏவிய உன் கட்டளையை அணி வகைகளாகக்
கொண்டு மனத்துள் அணிந்து நிற்கும் எங்கள் அன்பு என்றும் நீங்காது நிலைபெறுவதாகும்
8 |
இரவி வேய்ந்த
கஞ்ச மீன்ற விலகு முத்த மேய்த்துவெல்
புரவில் வேய்ந்த சேயை யீன்ற பொருவி லன்னை வாழுதி
சுருதி வேய்ந்த மாட்சி பூண்ட துணைவ னாய மாதவத்
துருவில் வேய்ந்த வேந்த வாழி யுறுதி யென்று வாழ்த்தினார். |
|
"இரவி வேய்ந்த
கஞ்சம் ஈன்ற இலகு முத்தம் ஏய்த்து, வெல்
புரவில் வேய்ந்த சேயை ஈன்ற பொருவு இல் அன்னை, வாழுதி!
சுருதி வேய்ந்த மாட்சி பூண்ட துணைவன் ஆய மா தவத்து
உருவில் வேய்ந்த வேந்த, வாழி உறுதி!" என்று வாழ்த்தினார். |
|