பக்கம் எண் :

முதற் காண்டம்640

     "ஆதவனை அணிந்து நின்ற தாமரை மலர் ஈன்ற ஒளியுள்ள
முத்துப் போன்று, யாரையும் வெல்லும் கொடையில் சிறந்த மகனைப்
பெற்றெடுத்த ஒப்பற்ற அன்னையே, நீ வாழ்க! வேதத்தை அணிந்த
மாட்சிமை பூண்ட துணைவனாகிய பெருந்தவத்து உருவாகத் தோன்றிய
மன்னனே, நீ நன்கு வாழ்க!" என்று அவ்விடையார் வாழ்த்தினர்.
 
                    9
இடத்தி டத்த டர்த்தி யுற்ற விக்கு டைத்த வின்புசொற்
குடத்தி யர்க்க மைத்த பற்றல் கூர்ந்து தோன்ற றாண்மிசை
தடத்து ணர்க்க மைத்த தேற றாங்கு மாலை சாத்தலு
முடித்த திங்க ளைத்தொ டுத்து டுக்க டுற்ற லொத்ததே.
 
இடத்து இடத்து அடர்த்தி உற்ற இக்கு உடைத்த இன்பு சொற்
குடத்தியர்க்கு அமைத்த பற்றல் கூர்ந்து, தோன்றல் தாள்மிசை
தடத் துணர்க்கு அமைத்த தேறல் தாங்கு மாலை சாத்தலும்
முடித்த திங்களைத் தொடுத்து உடுக்கள் துற்றல் ஒத்ததே.

     இடந் தோறும் நெருக்கமாக நின்ற, கரும்பை வென்ற இனிய
சொல்லை உடைய இடைச்சியர்க்கு உண்டான ஆசை மிகுதியாகி, பெரிய
இதழ்களுக்கிடையே பொருந்திய தேனைத் தாங்கி நின்ற மாலைகளைத்
திருமகனின் திருவடிகளில் சாத்தினர். அது நிறைமதியைச் சூழ்ந்து
விண்மீன்கள் செறிந்து கிடத்தலை ஒத்திருந்தது.
 
                   10
ஏத மின்றி மாலி யீன்றி காந்தி யென்று தோன்றலைக்
கோத கன்று யிர்த்த கோதை தாண்மு னன்ன கோவலர்
சீத வின்ப மோடி ரங்கு தேன மிழ்த மீகலும்
பாத மொன்று சோம னீன்ற பானி லாவை மானுமே.
 
ஏதம இன்றி மாலி ஈன்ற காந்தி என்று, தோன்றலைக்
கோது அகன்று உயிர்த்த கோதை தாள்முன் அன்ன கோவலர்
சீத இன்பமோடு இரங்கு தேன் அமிழ்தம் ஈகலும்,
பாதம் ஒன்று சோமன் ஈன்ற பால் நிலாவை மானுமே.