பக்கம் எண் :

முதற் காண்டம்642

     கன்னியாகிய தாயும், அக்கன்னிமைக்குச் சிறந்த காவலனாகிய
சூசையும் இனிய தேனடையினும் கனிவான இன்பம் தந்த அழகிய
சொற்களை அன்போடு சொல்லியமையால், அவ்விடையர் தம் சிந்தனையில்
அமைந்த குளிர்ச்சியான அன்பு மனத்தினுள் அடங்காமையால், அவர்கள்
கண்களினின்று விழும் மகிழ்ச்சிக் கண்ணீர் மழை மின்னலோடு மழை
தூவுதலை ஒத்திருந்தது.

     ஒத்த - 'ஒத்தது' என்பதன் கடைக்குறை, மின்னல் மகிழ்ச்சிச்
சிரிப்பிற்கும் மழை தூவல் கண்ணீருக்கும் உவமையாகக் கொள்க.
 
                  13
ஏவ லாகி மூவ ரையி றைஞ்சி யேங்கி யேகின
ராவ லாகி யாங்கு வைத்த வாவி யல்ல தில்லதால்
மேவ லாகி யாவி யாக வேய்ந்த வன்பி லாதெனி
னோவ லாகி வெற்று டற்க ளூரை யுற்ற லொத்ததே.
 
ஏவல் ஆகி, மூவரை இறைஞ்சி, ஏங்கி ஏகினர்.
ஆவல் ஆகி, ஆங்கு வைத்த ஆவி அல்லது இல்லதால்,
மேவல் ஆகி, ஆவியாக வேய்ந்த அன்பு இலாது எனின்,
ஓவல் ஆகி, வெற்று உடல்கள் ஊரை உற்றல் ஒத்ததே.

     பிரிந்து செல்லுமாறு கட்டளை பிறந்ததனால், மூவரையும் அவ்விடையர்
வணங்கி, ஏக்கத்தோடு சென்றனர். ஆசை கொண்டு அங்கு இட்டு வைத்த
உயிரேயல்லாமல் வேறு உயிர் தமக்கு இல்லாமையால், அதற்கு இசைந்த
போது, தமக்கு உயிராக அம்மூவர் மீது கொண்ட அன்பு மட்டும் இல்லாது
போனால், உயிர் ஓய்ந்து போக, வெறும் உடல்கள் மட்டுமே ஊரை
அடைதலுக்கு ஒப்பாகியிருக்கும்.
 
                    14
ஏக வாணை யேக வெங்கு மேக னாகி யாள்பவன்
மாக மேவு மாட நீக்கி மாடு மேவு ழைக்குறைந்
தாக மாடை வேந்தர் நீக்கி யாய ரைத்தெ ரிந்ததென்
றோகை யாக வோக னோடு மோங்கு தாயும் வாழ்த்தினாள்.