பக்கம் எண் :

முதற் காண்டம்643

ஏக ஆணை ஏசு எங்கும் ஏகன் ஆகி ஆள்பவன்,
மாகம் மேவு மாடம் நீக்கி, மாடு மேவு உழைக்கு உறைந்து,
ஆகம் மாடை வேந்தர் நீக்கி, ஆயரைத் தெரிந்தது என்று,
ஓகை ஆக, ஓகனோடும் ஓங்கு தாயும் வாழ்த்தினாள்.

     தன் ஒரே ஆணை எங்கும் செல்ல ஒருவனாய் இருந்து ஆளும்
ஆண்டவன், வானத்தை எட்டும் மாளிகையை விலக்கி, மாடுகள் தங்கும்
இடத்தின்கண் தான் தங்கி, மார்பில் பொன் அணி பூண்ட மன்னரை
விலக்கி, இடையரைத் தெரிந்துகொண்டது என்ன வியப்போவென்று.
உவகை கொண்டு, உவகை கொண்ட சூசையோடு உயர்ந்த தாயும்
திருமகனை வாழ்த்தினள்.

               சாந்தி ஐயமும் கன்னித்தாய் பதிலும்

     - மா, கூவிளம், கூவிளம், கூவிளம்
 
               15
முன்ன ருந்திய தீஞ்சுவை முல்லையார்
பின்ன ருந்திடப் பெட்புறீஇ நாடொறு
மின்ன ருந்திய மெல்லடி யாட்கரத்
தன்ன ருந்திருச் சேய்தொழ வண்ணுவார்.
 
முன் அருந்திய தீம் சுவை முல்லையார்,
பின் அருந்திடப் பெட்பு உறீஇ, நாள்தொறும்,
மின் அருந்திய மெல் அடியாள் கரத்து
அன்ன அருந் திருச் சேய் தொழ, அண்ணுவார்.

     இனிய சுவையை முன் நுகர்ந்து கண்ட இடையர், பின்னும் அதனை
நுகர்வதற்கு ஆசைகொண்டு, மின்னலொளியை உட்கொண்டு விளங்கிய
மெல்லிய அடிகளைக் கொண்ட மரியாளின் கைகளில் அந்த அரிய
திருமகனைக் கண்டு தொழுமாறு நாள் தோறும் வந்து அணுகுவர்.

     இப்பகுதியில் தொடர்ந்து வரும் பாடல்கள், முந்திய பாடலின்
இறுதியை அடுத்தப் பாடலுக்கு முதலாகக் கொண்டு அந்தாதியாய்
அமைந்துள்ளன. அடியாள் + கரத்து: 'அடியாள் கரத்து' என, உயர்திணை
சார்ந்த ஆறாம் வேற்றுமைத் தொகைப் பொருளில் இயல்பாக வரத்தக்கது,
'அடியாட் கரத்து' என இவ்விடத்து வந்தது போலத் திரிந்துவரக்